திருப்பதி, ஸ்ரீரங்கம் கோயில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி! சொர்க்கவாசல் திறப்பு நடைமுறை எப்படி வந்தது?
சென்னை: திருப்பதி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்ட கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சொர்க்கவாசல் திறக்கும் முறை ஏன் உருவானது தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

அதாவது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் இந்த சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. இந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் எதற்காக சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
ஏன் இந்த நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். முதல் கதையின்படி, விஷ்ணுபகவான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரின் இரு காதுகளில் இருந்தும் மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் தோன்றினர். தேவர்களைத் துன்புறுத்திய அவர்களை அடக்க தேவர்கள் திணறினர். விஷ்ணுவின் சக்தியால் உருவான அவர்களை, அவரால் மட்டுமே அடக்க முடியும் என்பதால், தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.
தேவர்களின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் மது மற்றும் கைடபருடன் போரிட்டார். பெருமாளின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசுரர்கள் சரணடைந்தனர். "தங்கள் சக்தியால் உருவான எம்மீது கருணை காட்ட வேண்டும்" என வேண்ட, பெருமாள் அவர்களை வைகுண்டத்தில் தன்னுடன் வசிக்க அருளினார்.
தங்களுக்குக் கிடைத்த இப்பேறு மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய மது-கைடபர்கள், பெருமாளிடம் ஒரு வரத்தைக் கோரினர். "வைகுண்ட ஏகாதசி அன்று, திருவரங்க வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் அனைத்துப் பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்க வேண்டும்" என வேண்டினர். இறைவனும் ஏற்றார்.
இரண்டாம் கதையின்படி, திருமால் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். உடலில் இருந்து வெளிப்பட்ட பெருமிதம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. அதே சமயம், திருமாலின் காதுகளில் இருந்து வெளிப்பட்ட மது-கைடபர்கள், அகங்கார பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த திருமால், "பிரம்மனைக் கொல்ல வேண்டாம்; வேண்டிய வரத்தைத் தருகிறேன்" என்றார்.
திருமாலின் வார்த்தைகளைக் கேட்ட அசுரர்கள், "நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்" என்று ஆணவத்துடன் கூறினர். அறியாமையைக் கண்டு சிரித்த திருமால், "அகங்காரம் கொண்ட நீங்கள் என் கையால் மாண்டு, ராட்சசர்களாகப் பிறக்க வேண்டும்" என்று சாபமிட்டார். அசுரர்கள் திகைத்து, அறியாமைக்கு வருந்தினர்.
அசுரர்கள், "இறைவா, உங்களோடு ஒரு மாதம் போரிட்டு, பின்னர் வதம் செய்யப்பட்டு சித்தியடைய வேண்டும்" என திருமாலிடம் வேண்டினர். அவர்களின் விருப்பப்படியே, திருமால் ஒரு மாதம் போரிட்டு அவர்களை வதம் செய்தார். வதம் செய்யும் தருணத்தில், "இறைவா! தாங்கள் வசிக்கும் பரமபதத்தில் நாங்களும் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்று அசுரர்கள் கோரினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து திருமால் உள்ளே அனுமதித்தார். அங்கே அனந்தனின் திவ்ய வடிவைக் கண்டதும் அசுரர்கள் ஆனந்தித்தனர். தங்களுக்குக் கிடைத்த இந்தப் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, "இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்" என்று வேண்ட, இறைவனும் அதை ஏற்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications