கல்யாண வயசு வந்தும் கெட்டிமேளம் கொட்டலையா? சிம்பிள் பரிகாரம்.. ஈஸியா பண்ணலாம்
சென்னை: கல்யாண வயசு எப்பவோ வந்தும் வரன் கிடைக்கலையே என்று பலரும் ஏங்கி தவிக்கின்றனர். எத்தனையோ தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் தடை நீங்கி திருமணம் நடைபெற சிம்பிள் பரிகாரம் இருக்கிறது. ஜோதிடர்கள் கூறியுள்ள இந்த ஆன்மீக பரிகாரங்களை செய்தால் தடைகள் நீங்கி தாலி கட்டும் யோகம் கைகூடி வரும்.
தோஷங்களுக்கு பரிகாரமும் செய்து பல இளைஞர்களும் இளம்பெண்களும் சலித்து போய் இருக்கின்றனர். தோஷம் என்று இருந்தால் பரிகாரங்கள் என்று ஒன்று இருக்கும். நவ கிரகங்களும், பஞ்ச பூதங்களும் பரிகாரங்களுக்கு கட்டுப்பட்டவைதான். உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.

திருமண தடைகள் எல்லாம் செவ்வாய் தோஷம், குரு தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், சந்திரன் சனி சேர்க்கையால் புனர்ப்பு தோஷம் என பலவித தோஷங்கள் ஏற்படுகின்றன. தோஷங்களுக்கு பரிகாரமும் செய்து பல இளைஞர்களும் இளம்பெண்களும் சலித்து போய் இருக்கின்றனர். தோஷம் என்று இருந்தால் பரிகாரங்கள் என்று ஒன்று இருக்கும். நவ கிரகங்களும், பஞ்ச பூதங்களும் பரிகாரங்களுக்கு கட்டுப்பட்டவைதான். உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.
குருபகவான்: குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பலம் இருந்தால் களத்திர ஸ்தானத்திற்கு குரு பார்வையிருந்தால் கல்யாணம் கைகூடி வரும். ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகருக்கு 5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும். ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு 11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும். ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும்.
விநாயகர் மகிமை:அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில் விநாயகர் இருந்தால் அந்த விநாயகரை 108 முறை சுற்றி வர திருமணம் கை கூடி வரும். அதிகாலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கேற்றி பஞ்சு அல்லது தாமரைத்தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி சில நிமிடங்கள் விளக்கின் மும் அமர்ந்து விரைவில் நல்ல இடத்தில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டியபின் அந்தக் குங்குமத்தை வழித்து எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொண்டு அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் நெற்றியில் வைத்து வர விரைவில் திருமணமாகும்.
வியாழக்கிழமை குளியல்: திருமணத்திற்கு வரன் பார்க்க வரும் போது புதிய ஆடைகள் அணிய வேண்டும் தோஷங்கள் இல்லாமல் கை கூடி வரும்.
குளிக்கும் முன்பு தண்ணீரில் மஞ்சள் தூள் ஒரே ஒரு குங்குமப்பூ போட்டு குளிக்கலாம் நன்மைகள் நடக்கும். ஆண்களுக்கு குங்குமப்பூ மட்டும் போடுங்க மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ சேர்த்த திலகம் வைக்க திருமணம் கை கூடி வரும். இந்த பரிகாரம் 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் செய்ய வேண்டும். இப்படி குளித்து வர விரைவில் திருமணமாகும்.
குங்கும அர்ச்சனை: ஏதேனும் ஒரு ஞாயிறு,செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் ஆலயம் சென்று குங்கும அர்ச்சனை செய்வது நல்லது. அம்மன் முன் அமர்ந்து அந்தக் குங்குமத்தை எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்து அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் பூசி வர விரைவில் திருமணமாகும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் அம்மன் படத்திற்கு முன்பு குங்கும அர்ச்சனை செய்யலாம்.
வாழை மரம்: 35 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் சிலர் சிரமப்படுகின்றனர். அவர்கள் வாழை மரம் நட்டு வைத்து பராமரிக்க வேண்டும். மகாவிஷ்ணு படத்தின் முன்பு வேண்டிக்கொள்ளுங்கள். ஞாயிறு கிழமைகளில் உப்பில்லாத சாப்பாடு சாப்பிடுங்கள் கால தாமதமான திருமணம் நடைபெறும்.
பசுவிற்கு அகத்திக்கீரை: ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் பசலைக்கீரை, புல், அகத்திக் கீரை ஆகியவற்றை ஏதாவது ஒன்றை தினசரி பசு மாட்டிற்குக் கொடுங்க. திருமணம் ஆகும் வரை கொடுக்கலாம். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் போடலாம். துளசி மாடத்தை வழிபாடு செய்தால் திருமணம் கை கூடி வரும்.
சனி பகவான் பரிகாரம்: ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும். கிரக தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரலாம் சனிபகவானால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.
இந்த பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றை நம்பிக்கையுடன் செய்து வர திருமணம் எளிதில் கைகூடி வரும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications