Aani Amavasya: ஆனி அமாவாசைக்கு இந்த காயை தானமாக கொடுங்க! முன்னோர்களின் 100% ஆசி கிடைக்கும்!
சென்னை: ஆனி மாத அமாவாசையில் இந்த ஒரு காய்கறி மட்டும் தானமாக கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என ஜோதிடர்கள் சொல்கிறார்கள். மேலும் ஆனி மாத அமாவாசையின் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை, ஆனி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசைக்கு விசேஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கான நாள் ஆகும்.

அமாவாசை விரதம் இருப்போர் தங்கள் வீட்டு வாசலில் கூட கோலமிட மாட்டார்கள். கூட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். முன்னோர்களின் உரு என சொல்லப்படும் காக்கைக்கு உணவளித்துவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.
தர்ப்பணம் கொடுக்க இயலும் என்போர் வீட்டிலேயோ அல்லது நீர் நிலைகளின் கரைகளிலேயோ தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த நிலையில் ஆனி மாத அமாவாசை வரும் 25 ஆம் தேதியாகும். இந்த ஆனி மாத அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்களில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை 6 மாதங்கள் வரை உத்தராயண புண்ணிய காலம் என்பார்கள். ஆனி மாதம் கடைசி மாதம் அதாவது உத்தராயண புண்ணிய காலம் நிறைவு பெறும் மாதம்தான் ஆனி மாதம். அதனாலேயே இந்த மாதத்தில் வரும் அமாவாசைக்கு சிறப்புகள் உள்ளன.
இந்த உத்தராயண புண்ணிய கால அமாவாசை தீராத சாபங்களையும் பாவங்களையும் நீக்கும். குடும்பத்தில் செய்வினைகள் இருந்தாலும் அவை நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்க முன்னோர் வழிபாடு அவசியம். எனவே ஆனி அமாவாசை அன்று கடற்கரை, ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்பவர்களுக்கு எல்லா கிரகங்களும் அருள் புரியும். நினைத்தது கை கூடும். வீட்டில் சுப காரியங்கள் எந்த தங்கு தடையுமின்றி நடக்கும். வரும் புதன்கிழமை அன்று காலை வீட்டைத் துடைத்து அதிகாலையிலேயே விளக்கு ஏற்ற வேண்டும்.
நேர்மறை சக்திகளை பெற புதிய மாவிலைகளை வீட்டின் முன்னால் கட்ட வேண்டும். புரோகிதரை அழைத்து எள்ளும் தண்ணீரும் கரைத்துவிட செய்ய வேண்டும். அவருக்கு வாழைக்காய், அரிசி, பருப்பு ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். பின்னர் பிண்டம் வைத்துவிட்டு உங்களால் முடிந்த தட்சணையை கொடுக்க வேண்டும். எனவே முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை விரதமிருப்பது நல்லது என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications