கடக ராசிக்கு பேச்சுல தான் பிரச்சனையே.. அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய 3 நட்சத்திரம் ஒன்பது பாதங்களைக் கொண்ட ராசி கடகம். ராசியின் அதிபதி சந்திரன் அதிகவேகமாக செல்லக்கூடிய கிரகம். வருட கிரகங்கள் உங்களுக்கு ஏற்றவாறு இல்லை. 12 ஆம் இடத்தில் குரு மறைந்திருக்கிறார். சனி, ராகு 8 ஆம் இடத்திலும், கேது 2 ஆம் இடத்திலும் இருக்கிறார். ஆனால் மாத கிரகங்களான சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களை வைத்தே மாத பலன்கள் கணிக்கப்படுகின்றன.
வெற்றி
இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். 11 ஆம் அதிபதி பத்தாம் இடத்தில் இருக்கிறார். உங்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். ஆனால் வேலைக்கு உண்டான சம்பளம் கிடைக்காது. ஜூன் 29 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரனும் 11 ஆம் இடத்தில் ஆட்சிப் பெற்று போகிறார். இதன் மூலமாக நிச்சயமாக நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் காலகட்டமாக இருக்கும். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தி அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
செலவுகள்
12 ஆம் அதிபதியான புதன் உங்கள் ராசியில் 12 ஆம் இடத்தில் ஆட்சிப் பெற்று இருக்க போகிறார். ஒரே வாரத்தில் உங்கள் ராசியிலேயே வந்து அமர்கிறார். ராசியில் அமரும்போது சிறு சிறு செலவுகள் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ராசிக்கு 2 ஆம் அதிபதியும் 12 ஆம் இடத்தில் போவதால் தேவையில்லாத செலவுகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும்.
வண்டி வாகனங்களில் கவனம்
உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் பேச்சில் கொஞ்சம் கடினம் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் உண்சாகும். 2ம் இடத்தில் கேது அமர்ந்துள்ளதால் நீங்கள் சொல்ல வருவதை பிறர் புரிந்து கொள்ள மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் சனியுடன் சேர்ந்து ராகு இருப்பதால் மிகப்பெரிய பாதிப்புகள் வரும். வண்டி, வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பணத்திற்கு தட்டுப்பாடு
தேவையில்லாமல் எதிலும் சென்று அதிகமாகப் பணத்தைப் போடுவதை தவிர்ப்பது நல்லது. முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. வேலை செய்பவர்களுடன் மிகுந்த கவனம் தேவை. எதிர்பாலினத்தவர்களுடன் பழகும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பேச்சில் கவனம் தேவை. பண வரவில் பின்னடைவு ஏற்படும். செவ்வாய் இருந்தாலும் கேது இருப்பதால் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும்.
முயற்சி வெற்றி
செலவுகள் அதிகமாக இருக்கும். வரவுகள் மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்திராஷ்டம நாட்களில் புதிய முயற்சிகள், பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் அருகில் இருக்கும் கோசாலையில் பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்து விட்டுச் செல்வது நல்லது. புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications