திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு ஏசி ஸ்பெஷல் பஸ்.. அமைச்சர் சிவசங்கர் குட் நியூஸ்
சென்னை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயக்கபட உள்ளது.

நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சுவாமி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நாளை மறுநாள் 22ஆம் தேதி புதன் கிழமை பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா வருவார்கள்.
23ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் மகா தேரோட்டம் நடைபெறும். இந்த மகா தேரோட்டம் நிகழ்வைக் காண சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா தீபத்திருவிழா நடைபெற உள்ளது.
26ஆம் தேதி அதிகாலையில் நடைபெறும் பரணி தீப நிகழ்வின் போதும், மாலை நேரத்தில் நடக்கும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வின் போதும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் எங்கிருந்து, எப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications