2000 கிலோ அன்னம்.. 700 கிலோ காய்கறிகள்.. தமிழகத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம்.. தரிசித்த பக்தர்கள்
தஞ்சாவூர்: பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம், 700 கிலோ காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண் குளிர தரிசனம் செய்தனர்.
சோறும் சொர்க்கமும்: நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்வார்கள். பசித்தாலும் சிலருக்கு சோறு கிடைக்காது. ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் சிலருக்கு சோறு கிடைக்காது. உணவு இருந்தாலும் சிலரால் சாப்பிட முடியாது. அன்னதோஷம் ஏற்பட்டவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி பவுர்ணமி சிறப்பு: ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பானது. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். திங்கள் முடிசூடிய சிவனுக்கு, சந்திரன் முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ்பெற்று சிறந்து பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதைப்போல் இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அன்னாபிஷேகம்: சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்ட 700 கிலோ காய்கறிகள் கொண்டும் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது, இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
பக்தர்களுக்கு பிரசாதம்: அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

கங்கை கொண்ட சோழபுரம்: உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் தற்போது உலக புராதான சின்னமாக திகழ்ந்து வருகிறது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மலையாக குவிந்த சாதம்: 2500 கிலோ பச்சரிசியை கொண்டு பிரத்தியகமாக தயார் செய்யப்பட்ட நீராவி அடுப்பைக் கொண்டு கோவில் வளாகத்தில் சாதம் தயார் செய்யப்பட்டு மூலஸ்தானத்திற்கு எந்திரம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தயார் செய்யப்பட்ட சாதத்தினை ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கமாக கருதக்கூடிய அதாவது இந்த லிங்கமானது சுமார் 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினால் ஆன சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரம்: சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து மஹா பஞ்ச தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீதம் உள்ள சாதத்தினை இங்கு இருக்கக்கூடிய ஆறு, ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாகவும் அளிக்கப்பட்டது.
சிவனாக மாறிய அன்னம்: அன்னாபிஷேகத்தின் போது ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவதும், இதனால் கோடிக்கணக்கான லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக கூறப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் நடைபெற்றதை ஏராளமான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர். அரியலூர், தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவனடியார் பெருமக்கள் மற்றும் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications