அழகர்கோவில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம்.. கள்ளழகரை காண தயாராகும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பணிகள் இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்னும் சொல் வழக்கமும் உண்டு. கோ என்றால் இறைவன் புரம் என்றால் இருப்பிடம். இறைவன் இருக்கும் இருப்பிடமே கோபுரம். அதனால் கோயில்களில் உள்ள கோபுரத்திற்கு மிக சிறப்பு உண்டு.

Alagar kovil kallazhagar temple in Madurai lit up ahead of Kumbhabhishekam

இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தர ராஜ பெருமாளுக்குத் தைலக்காப்பு நடைபெறும். இது தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரையிலான 6 மாத காலத்துக்கு நடைபெறும். இந்த தைலப்பிரதிஷ்டை நடக்கும் காலங்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட முடியும். மேலும், இங்குள்ள யோக நரசிம்மர் உக்கிர ரூபத்தில் உள்ளதால், நரசிம்மரின் உக்கிரத்தைத் தனிக்கத் தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

தமிழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் ஜொலித்து வருகிறது. திருக்கோவிலின் காவல் தெய்வமாகப் பதினெட்டாம்படி கருப்பசாமி அமைந்துள்ளார். மதுரையின் அடையாளமான சித்திரைத் திருவிழாவின்போது அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு வந்து கள்ளழகர் ஆக தங்க குதிரை வாகனத்தில் வந்து வைகையில் இறங்குவார் கள்ளழகர்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அழகர் கோவில் ராஜகோபுரத்திற்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோபுரம் ஏழு நிலைகளுடன் பிரம்மாண்டமாக காணப்படுகிறது. இந்த கோபுரத்துடன் 18ம் படி கருப்பசாமி கோவில் இணைந்துள்ளது. ராஜகோபுர கதவுகள் திறக்கப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஆடி பவுர்ணமி நாட்களில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதனைக் காண ஏராளமானோர் அழகர் மலையில் கூடுவார்கள்.

அழகர் கோவிலில் கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக ராஜகோபுரம் 2 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்தது. புது வண்ணங்களும் பூசப்பட்டன.

7 நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் வர்ணங்கள் பூசப்பட்டு ஜொலிக்கிறது. ஆறரை அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து நாளைய தினம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்காக அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கின.

மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டன. கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக யாகசாலைக்கு தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். யாகசாலையில் 8 யாக குண்டங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 160 புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள் கலந்து கொண்டு மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகளை தொடங்கினர். வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்தன.

இந்நிலையில் இன்று புதன்கிழமை 2-வது நாள் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+