திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்! நாளை முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து!
திருப்பதி: திருச்சானூர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி நாளை (நவம்பர் 26ஆம் தேதி) முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை போல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த பிரம்மோற்சவம் நாளை முதல் தொடங்குகிறது.

இதன் முதல் நிகழ்வாக ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. வரும் 27ஆம் தேதி குங்கும அர்ச்சனை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும். அது போல் 28ஆம் தேதி துவஜரோஹனம், இரவு சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வருதல் நடைபெறும்.
அது போல் 29ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகனத்திலும் மாலை அம்ச வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. அது போல் வரும் 30-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும் டிசம்பர் 1ஆம் தேதி கல்பவிருக்ஷ வாகனத்திலும் மாலை அனுமந்த வாகனத்திலும் அடுத்த நாள் டிசம்பர் 2ஆம் தேதி பல்லக்கு வாகனத்திலும் மாலை கஜ வாகனத்திலும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வபூபால வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
அது போல் டிசம்பர் 4ஆம் தேதி சூர்ய பிரபை வாகனத்திலும் மாலை சந்திர பிரபை வாகனத்திலும் டிசம்பர் 5ஆம் தேதி ரதோஸ்வமும் நடைபெறும். அடுத்த நாள் டிசம்பர் 6ஆம் தேதி பல்லக்கு உற்சவமும் பஞ்சமி தீர்த்தமும் மாலை புஷ்பயாகமும் நடைபெறுகிறது. அன்றுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
திருச்சானூர் பத்மாவதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. இந்த பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவாக்களும் நாளை முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications