மகிழ்ச்சியுடன் கணவன் மனைவி வாழணுமா? பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேரணுமா? இந்த எளிய பரிகாரம் போதுமே
சென்னை: பத்து பொருத்தம் பார்த்தே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்கின்றனர்.. சிலர், பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்து தரும் படி ஜோதிடரை நிர்பந்தம் செய்துவிடுவதால், தம்பதிக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன.. பிரிந்த தம்பதிகள் இணைவதற்கு ஏதாவது பரிகாரங்கள் உள்ளதா?
ஜாதகங்கள் பொருந்தினால் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்றும், திருமணத்திற்கு முன்பே, சம்பந்திகளிடம் ஏதாவது முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் வந்தால், திருமணத்தை ரத்து செய்வதே சிறந்தது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.. அதேபோல 2 குடும்பத்தின் தொழில், தகுதியும் ஒத்துப்போக வேண்டும்.

ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருப்பதும், பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருப்பதும் சிறப்பு கிடையாதாம்.. இப்படியொரு அமைப்பு இருந்தாலே, மணமகனுக்கு தொழிலில் சிக்கல் வரலாம், நிதி நெருக்கடியும் ஏற்படும், குடும்பத்தில் பிரிவினை ஏற்பட்டு, மனநிம்மதியும் இழக்க நேரிடும்.
என்ன காரணம்: அதேபோல, 6, 7-ம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், கல்யாண தடை ஏற்படலாம்.. அப்படியே திருமணம் நடந்துவிட்டாலும், அதுவும் தோல்வியிலேயே முடியும்... அதுமட்டுமல்ல, ஜனன கால ஜாதகத்தில் 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 6,8-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும்போது, நிச்சயம் தம்பதி பிரிய நேரிடும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே, ஜோதிடர்கள் அறிவுரைப்படி திருமணத்தை நடத்திமுடிப்பது சிறந்தது.
பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய வேண்டுமானால், இதற்கும் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.. திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் வழிபாடும் சங்கரன் கோவில் சங்கர நாராயணர், கோமதியம்மன் வழிபாடும் கைமேல் பலன் தரும் என்கிறார்கள்.
நாகங்கள்: கணவனை விட்டு மனைவி பிரிய நேர்ந்தால், வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் கோவில்களில் இருக்கக்கூடிய அரச மரத்தடியில் 2 நாகங்கள் பின்னியபடி காணப்படும் சிலைகளுக்கு பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். கணவன் இப்படி செய்வதால், விட்டு சென்ற மனைவி உடனே இணக்கமாகி விடுவாராம்.
அதேபோல, வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் வெள்ளை மொச்சையை, சிறிது அகலில் விளக்கில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வந்தாலும், மனைவி விரைவிலேயே வந்து சேருவார்.
மனைவி வழிபாடுகள்: அதேபோல, பிரிந்து சென்ற கணவன் மனம்மாறி ஒன்றுசேர, கோவிலிலுள்ள அரச மரத்தடி பின்னிய நாக சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் அபிஷேகம் செய்யலாம். மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரம் இணைந்தவாறு வரக்கூடிய செவ்வாய்களில் இந்த பரிகாரம் செய்வது கூடுதல் சிறப்பை தரும்.
செவ்வாய்க்கிழமைகளில் அகல் விளக்கில் துவரம் பருப்பை போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவதால், பிரிந்த கணவன் மனம் மாறி விரைவில் ஒன்றுசேர்வார்கள் என்றார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications