குபேர தீபத்தில் இதை மட்டும் சேர்த்தால் போதும்.. ஜாதிக்காய் பரிகாரம் அள்ளித்தரும் அதிர்ஷ்டம் பெருகும்
சென்னை: மருத்துவ குணம் நிறைந்த ஜாதிக்காய், ஆன்மீகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.. ஏழையையும், பணக்காரனாக்கும் சக்தி கொண்டது ஜாதிக்காய்கள்.. ஜாதிக்காய் வைத்து எளிய பரிகாரங்களை எப்படி செய்வது? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா?
எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியையும் போக்கக்கூடியது ஜாதிக்காய்.. அதனால்தான், ஒரு சிவப்பு துணியில் 3 ஜாதிக்காய்களை வைத்து முடிச்சு போல கட்டி நிலைவாசலில் தொங்கவிடுவார்கள்.. இதனால் எதிர்மறை சக்திகள், துர்சக்திகள், சோம்பல், உட்பட எதுவும் வீட்டிற்குள் அண்டாது.. அதுமட்டுமல்ல, அந்த காலத்தில் பெரியவர்கள், வீட்டில் பீரோ அல்லது பணப்பெட்டியில், ஒரு ஜாதிக்காயை போட்டு வைப்பார்கள்.. இதனால கண் திருஷ்டிகள் நீங்குவதுடன், பணமும் சேர துவங்கும்..

குபேர தீபம் ஏற்றலாம்
வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது ஜாதிக்காய்.. ஜாதகத்தில் வியாழன் நிலையையும் சரிசெய்யக்கூடிய ஆற்றல் ஜாதிக்காய்களுக்கு உண்டு.. எனவே, வியாழன் கிரகம், பலவீனமாக இருப்பவர்கள், ஒரேயொரு ஜாதிக்காயில், மஞ்சள் திலகமிட்டு, வியாழக்கிழமைகளில் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
ஜாதிக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் விளக்கேற்றினாலும், குடும்பத்துக்கு மிகவும் நல்லது.. ஆனால், ஜாதிக்காய் எண்ணெய்யுடன் விளக்கேற்றும் எண்ணெய்யையும் சிறிது கலந்து ஏற்ற வேண்டும்.. அகல் விளக்கில் நல்லெண்ணெய், ஜாதிக்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து, திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்றி வைத்து, பிரார்த்தனை செய்தால் போதும்.. நாளடைவில் மாற்றம் தென்பட துவங்கும்.. குபேர தீபம் ஏற்றினாலும், இந்த ஜாதிக்காய் எண்ணெய்யை 2 ஸ்பூன் கலந்து ஏற்றினால், குபேரரின் பூரண ஆசியும் கிடைக்கும்.
நகைப்பெட்டி, அரிசி பானை
அல்லது மஞ்சள் நிற துணியில் 3 ஜாதிக்காய்கள், சிறிது சில்லறைகள், சிறிது ரூபாய் நோட்டுகளை போட்டு, மூட்டையாக கட்டி, பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்துவிடலாம்.. இது நாளடைவில் செல்வத்தை பன்மடங்காக்கும்.. நகைப்பெட்டியிலும் இந்த முடிச்சு போட்டு வைக்கலாம். ஆனால், அதில் சில்லறை, ரூபாய் நோட்டுகளுக்கு பதில், ஜாதிக்காய்களுடன் சிறிய தங்கம் ஏதாவது ஒன்றை வைத்து கட்ட வேண்டும்.
அதேபோல, அதேபோல 3 ஜாதிக்காயை, சிறிது பச்சரிசிடன் சேர்த்து மூட்டையாக கட்டி, அரிசி பானைக்குள் வைக்கலாம். இதனால் உணவு பஞ்சம் ஏற்படாமல், மகாலட்சுமியின் அருள்கிடைக்கும். வீட்டின் பூஜையறையிலும் ஜாதிக்காய்களை வைக்கலாம்.. வெறும் ஜாதிக்காய்களை மட்டும் வைத்து மூட்டையாக கட்டி, பிள்ளைகள் புத்தகம் வைக்கும் அலமாரியில் வைக்கலாம்.
எளிய பரிகாரங்கள்
கடன் தொல்லை அதிகமாக இருந்தாலோ, நிதி சிக்கல் இருந்தாலோ தீர்ந்து, 48 நாள் எளிய பரிகாரம் செய்யலாம். குறிப்பாக, வெள்ளிக்கிழமை, பெளர்ணமி வரும் நாட்கள் அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்கள், சதுர்த்தி நாட்களில், பிரம்மமுகூர்த்தத்தில் இந்த பரிகாரம் செய்தால் சிறப்பு.
இதற்கு 1 ரூபாய் நாணயம், 11 எடுத்துக்கொண்டு, அதில் புனுகை தடவ வேண்டும். பிறகு, மஞ்சள் அல்லது சிவப்பு நிற பருத்தி துணியில், புனுகு தடவிய நாணயங்கள், ஏலக்காய், ஜாதிக்காய் போட்டு, அனைத்தையும் முடிச்சாக கட்டி, ஒரு பாத்திரத்தில் வைத்துவிட வேண்டும். இந்த பாத்திரத்தின் மீது பச்சரியை கொட்டி மூடிவிட வேண்டும்...
48 நாட்களில் மாற்றம்
குடும்பத்தில் அதிகமாக சம்பாதிப்பவர்கள் தூங்கும் இடத்தில் இதனை வைத்துவிட்டு 48 நாட்களுக்கு தொடாமல் இருக்க வேண்டும். 48 நாட்கள் கழித்து, ஏலக்காய், ஜாதிக்காயை ஓடும் நீரில் விட்டுவிடலாம்.. பச்சரிசியை எறும்புகளுக்கு தந்துவிடலாம். இந்த பரிகாரம், பணக்கஷ்டம் நீங்கி, பணத்தை குடும்பத்தில் பெருக்க வைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
மன அமைதியை தரக்கூடிய ஆற்றல் இந்த வாசம்மிக்க ஜாதிக்காய்களுக்கு உள்ளது.. எனவே, இதனை மாலையாகவும் கட்டி அணிந்து கொள்ளலாம்.. நாம் செய்யும் காரியம் வெற்றி பெற வேண்டுமானால், ஜாதிக்காயை லேசாக பன்னீர் தெளித்து கல்லில் உரசி, அந்த விழுதை நெற்றியில் வைத்து கொள்ள வேண்டும். இதனால் எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும்..!!












Click it and Unblock the Notifications