கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? கை கொடுக்கும் வெல்லம் பரிகாரம்.. தடையின்றி பணம் வீட்டில் புழங்குமே
சென்னை: எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தொல்லைகள் விரட்டி விரட்டி வருகிறதா? கழுத்தை நெரிக்கும் பிரச்சனையிலிருந்து விடுபட எளிய பரிகாரங்களை செய்து, அதிலிருந்து மெல்ல மீண்டு வரலாம். இதுகுறித்து சாஸ்திரங்களில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.
பெரும்பாலும் கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகரும்.. சொல்ல முடியாத அளவுக்கு மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள். இதுபோன்ற தொந்தரவில் சிக்கி உள்ளோர், பச்சரிசி பரிகாரங்களை செய்யலாம்.

பச்சரிசி: இந்த பச்சரிசி பரிகாரத்தை வெள்ளிக்கிழமை, பெளர்ணமி வரும் நாட்கள் அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்கள், சதுர்த்தி நாட்கள்.. இப்படி ஏதாவது ஒரு நாளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரம்மமுகூர்த்தத்தில் செய்வது நல்லது..
இதற்கு 1 ரூபாய் மொத்தம் 11 எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், புணுகு என்ற பொருள், ஜாதிக்காய், ஏலக்காய் போன்றவற்றையும் வாங்கி வைத்து கொள்ளவேண்டும்.
நாணயங்கள்: இப்போது 11 ரூபாய் நாணயங்களின் மீது, இந்த புணுகை சிறிது தடவிவிட வேண்டும்.. மஞ்சள் அல்லது சிவப்பு நிற பருத்தி துணி ஒன்றை எடுத்துக்கொண்டு, புணுகு தடவிய நாணயம், ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றையும் அதில் போட்டு, அனைத்தையும் முடிச்சு போட்டு, ஒரு பாத்திரத்தின் உள்ளே வைத்துவிட வேண்டும். இந்த பாத்திரத்தின் மீது பச்சரியை கொட்டி மூடிவிட வேண்டும்...
குடும்பத்தில் அதிக சம்பளம் பெறும் நபர்கள் தூங்கும் இடத்தில் இதனை வைத்து விட்டால் போதும். 48 நாட்களுக்கு இதனை தொடாமல் இருக்க வேண்டும். 48 நாட்கள் கழித்து, பாத்திரத்திலுள்ள ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை தண்ணீரில் விட்டுவிட வேண்டும். பச்சரிசியினை எறும்புகளுக்கு தந்துவிடலாம். இதனால், பணக்கஷ்டம் நீங்கி, பணம் பெருக துவங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மொச்சைக்கொட்டை: அதேபோல, 27 மொச்சைக்கொட்டைகளுடன் சிறிது வெல்லத்தையும் எடுத்து, உள்ளங்கையில் வைத்து கொண்டு, ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும்... பிறகு ஒரு தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில், மொச்சக்கொட்டை, வெல்லத்தையும் சேர்த்து கலந்து, பசு மாட்டுக்கு தரலாம். அல்லது ஓடும் ஆற்றில் கரைத்து விடலாம். வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 11 வாரம், சூரிய உதயத்திற்கு முன்பாக செய்து வரும்போது, பணக்கஷ்டம் மெல்ல குறைய துவங்கும்..
அதேபோல, , கடன் சிக்கலில் உள்ளவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வரவேண்டும்... இதுபோல் 12 வாரமும் துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வந்தால், கடன் பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்பார்கள்.
அரச இலைகள்: அதேபோல அரச இலையை வைத்தும் பரிகாரம் செய்யலாம்.. அரச இலையில், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு குங்கும பொட்டு, பூ வைத்து, பூஜையறையில் வைத்து, தீபம் ஏற்ற வேண்டும். ஒரு வெற்றிலையை எடுத்து அதில், உங்களது கடன் தொகை எவ்வளவு என்பதையும், அந்த கடன் தீர வேண்டும் என்றும் எழுத வேண்டும். பிறகு வெட்டிவேர் ஒரு துண்டு, நெல்மணி ஒரு ஸ்பூன், 2 அருகம்புல் போன்றவைகளை வெற்றிலையில் வைத்து, மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்துவிட வேண்டும்.
இப்போது பிள்ளையாருக்கு தீபாராதனை காண்பித்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.. இப்படி வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வரும்போது பலன் கிடைக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications