பீரோவில் பணம் வந்துட்டே இருக்கணுமா? கொடுத்த கடன் திரும்ப வரணுமா? வீட்டில் மகிழ்ச்சி தங்க இது போதுமே
சென்னை: வீடுகளில் ஒருசில விஷயங்களை சரியாக செய்தாலே, கடன் பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து, பணமும் சேர ஆரம்பிக்கும் என்கிறார்கள்.. அதேபோல, சில பரிகாரங்களை செய்வதால் வீட்டிலுள்ள நிதி நிலைமையும் சீராகின்றன. அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமானால், வீட்டின் வடக்கு சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். ஈசான்ய மூலையில் உள்ள ஜன்னல் திறந்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம்.

தெற்கு திசை: எனவே, தெற்கு திசையில் உள்ள பீரோவில் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அதேபோல, வசம்பு, பச்சை கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக முடிச்சு போல கட்டி, பணம் வைக்கும் இடத்தில் வைப்பதால் பணம் சேரும்.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவில்லை என்று நினைப்பவர்கள், வீட்டில் மயிலிறகை வைக்கலாம்.. இதனால், செல்வம் பெருகும். பணம், நகை வைக்கும் பீரோவிலும் ஒரு மயிலிறகை போட்டு வைப்பதால், செல்வம் அதிகரிக்கும்.. அதேபோல, மகாலட்சுமியின் அருள் நிறைந்த வலம்புரி சங்கினையும், வீட்டில் வைத்திருப்பதால் குறைவின்றி செல்வம் தங்கும்.
மஞ்சள் நீர்: எப்போதுமே, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில், ஒரு செம்பு நீரில் மஞ்சளை கரைத்து, வீட்டை சுற்றி தெளித்துவிட வேண்டும்.. இதனால் வீட்டை சுற்றிலும் துர்சக்திகள் நெருங்காது, தீய சக்திகளும், கண்திருஷ்டியும் நீங்கிவிடும். அதேபோல, இந்த கிழமைகளிலும், 5 முகம் கொண்ட குத்து விளக்கேற்றி திருமகளை வழிபட்டு வந்தால் நிதிநிலைமை சீராகும்.
நீங்கள் உபயோகப்படுத்தும் பர்ஸில், பிறரது பொருளை வைத்திருக்கக்கூடாது.. அந்த பொருட்களால், நெகட்டிவ் எனர்ஜி அதிகமாகிவிடும்.. எனவே, மற்றவர்கள் தந்த விசிட்டிங் கார்டு முதல் எந்த பில்லையும் வைத்திருக்க வேண்டாம். உங்களது மெடிக்கல் பில் என்றாலும், அதையும் பர்ஸில் வைக்ககூடாது.. கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளுடன், 11 ரூபாய் பணம் வைத்திருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல, பெருமாள் கோவிலில் தரும் 2 துளசி இலையை பர்ஸில் வைக்கலாம்.
சனிக்கிழமை பரிகாரம்: அதேபோல, நாம் பிறருக்கு தந்த பணம், நகைகள் மீண்டும் கைக்கு வராமல் போனால், இதற்கு எளிய பரிகாரம் ஒன்று செய்யலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் சனிக்கிழமை இந்த பரிகாரம் செய்ய வேண்டும, தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவில், ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து 2 ஸ்பூன் போட்டு, அதில் பசும் தயிரையும் சேர்த்து ஊறவிட வேண்டும். மறுநாள் சனிக்கிழமை குளித்து முடித்துவிட்டு , பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு , ஊற வைத்துள்ள அந்த கருப்பு உளுந்தை அருகிலுள்ள அரச மரத்தடியில், அந்த மரத்தின் வேரில் படும்படி போட்டுவிட்டு கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
பணம், நகை: பிறகு, பணம், நகையை யாருக்கு கடனாக தந்தீர்களோ, அவை திரும்ப கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் இதனை தொடர்ந்து செய்து வரும்போது, உங்களது பணம், நகை விரைவில் உங்களை வந்தடையும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications