குலதெய்வம் போட்டோவை வீட்டில் வைக்கலாமா? குலதெய்வத்தை அறிவது எப்படி? குலத்தை வாழ வைக்கும் குலதெய்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான்.. அனைத்து தெய்வங்களின் அனைத்து ஆசியும் கிடைத்து கொண்டே இருக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்துவர வேண்டும் என்பார்கள்... குலதெய்வத்தை நாம் ஏன் வணங்க வேண்டும்? குலதெய்வத்தை எப்போது வணங்கலாம்? குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்

குழந்தை பிறந்தது முதல் திருமணம், சுபநிகழ்வு வரை குலதெய்வத்தின் அருளாசி தேவைப்படுகிறது.. சிலருக்கு குலதெய்வம் யார் என்பது தெரியாமல் இருக்கும். அல்லது வெளிநாடுகளில் குடியேற வேண்டிய சூழல் இருக்கும்.. குலதெய்வம் தெரியாதவர்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்,.

Spirtual Kula Dheivam kuladeivam vazhipadu

குலதெய்வத்தை அறிந்து கொள்ள, சில எளிய வழிகளை முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.. குறிப்பாக, வீட்டின் நிலை வாசலில் மஞ்சள், குங்குமமிட்டு, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து தொடர்ந்து வழிபட்டு வரும்போது குலதெய்வம் வீடு தேடி வரும் என்பார்கள்.

பிரம்ம முகூர்த்த நேரம்

அதேபோல வெள்ளிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும்.

விளக்கின் தண்டுப்பகுதியில் பூ, மஞ்சள், குங்குமம் இட்டு, வெற்றிலை பாக்கு, பூ, பழம், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து, எங்களின் துன்பம் தீர இந்த படையலை ஏற்றுக் கொண்டு, நாங்கள் வழிபடுவதற்கு எங்களின் குலதெய்வம் யார் என காட்டு" என்று வேண்டிக்கொள்ளலாம். இப்படி செய்து வந்தால் குலதெய்வத்தை விரைவில் அறிய முடியும்.

நொச்சி மரக்கிளை

அதேபோல, தெய்வாம்சம் கொண்ட நொச்சி மரத்தை வைத்து, வெள்ளிக்கிழமையில் 5 வாரங்கள் எளிய பரிகாரம் ஒன்றை செய்யலாம்..

நொச்சி மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி குலதெய்வமாக கருதி ஆவாகனம் செய்ய வேண்டும். இந்த மரத்தின் அடியில் மண்பானை அல்லது பித்தளை செம்பில் நீர் நிரப்பி கலசம் போல தயாரிக்க வேண்டும். இதன் அருகில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூக்களை சாற்ற வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் குளித்துவிட்டு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். மண் தட்டு அல்லது வாழை இலையில் நைவேத்தியமாக செய்த சர்க்கரைப் பொங்கலை படைத்து, தீபத்திலும் தூபத்திலும் குலதெய்வத்தை ஆராதித்து முழு மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இரண்டு மண் அகல் விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் பூசி நெய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்..

'குலதெய்வமாகிய உம்மிடமே மன்றாடுகிறோம். எங்களுடைய கஷ்டங்கள், நஷ்டங்கள் எல்லாவற்றிலும் எங்களை காத்து வழிநடத்து எங்கள் குல தெய்வமே!'' என வேண்டி கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து 5 வாரங்கள் செய்துவரும்போது, 6வது வாரம் குலதெய்வ அருள் உங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

அத்தி மர கிளை பரிகாரம்

அதேபோல, அத்தி மர கிளையை வைத்தும் பரிகாரம் செய்யும்போது, குலதெய்வத்தை அறிந்து கொள்ளலாம்..

இந்த பூஜையை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு மேல் வளர்பிறையில் துவங்கி 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

அதாவது, அத்திமரத்தின் கனமான கிளையில், வயநமசி என்று எழுதி, மஞ்சள் பூசி, குங்கும பொட்டு வைத்து, மஞ்சள் பட்டு துணியையும் கிளையின் மீது சுற்றிவிடவேண்டும். இந்த கிளையை தென்மேற்கு மூலையில் வைத்து, கிழக்கு திசையில் உட்கார்ந்து தினமும் ருத்ராட்ச மாலையால் 'வயநமசி' என 1008 முறை வீதம் 48 நாட்கள் பிரார்த்தித்து வந்தால், குல தெய்வமே நம்முடைய கனவில் தோன்றும் என்பார்கள்..

இலுப்பை எண்ணெய்

அதேபோல, விடியற்காலை நேரத்தில், ஒரு மண் அகல் விளக்கில், 1 ரூபாய் நாணயத்தை போட்டு, அதில் இலுப்பை எண்ணெய் சிறிது ஊற்றி, 2 திரிகளையும் ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி இருக்குமாறு அகல் விளக்கை வைத்து, குலதெய்வத்தை நினைத்து வணங்கி வருவதால், பரிபூரண அருளை பெறலாம்.

வெள்ளிக்கிழமை பிரம்மமுகூர்த்த நேரத்தில், ஒரு அகல் விளக்கில் இலுப்ப எண்ணெயை ஊற்றி, 2 திரியை ஒன்றாக சேர்த்து குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றுவதால் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெறலாம். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி மஞ்சள் திரியிட்டால் குபேரன் அருளை பெறலாம்.. கடன் தொல்லை இருந்தால், சிகப்பு திரியிட்டு வழிபடலாம்.

எத்தனை முறை செல்லலாம்

குலதெய்வம் கோவிலுக்கு எத்தனை முறை சொல்லலாம்? என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம்.. குலதெய்வம் கோவிலுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம்.. அருகில் இருந்தால் தினமும்கூட சென்று வரலாம்.

சற்று தள்ளியிருந்தால், வாரம், மாதம், 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்று வரலாம்.. ஆனால், குலதெய்வம் கோயில் எங்கிருந்தாலும்சரி, வருடத்துக்கு ஒரு முறையாவது, கண்டிப்பாகச் சென்று வழிபடுவதே நல்லது. அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் குலதெய்வ வழிபாடு செய்வதால், நன்மைகள் பிறக்கும்.

குலதெய்வம் போட்டோ

குலதெய்வத்தின் போட்டோவை வீட்டில் வைக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகமிருக்கலாம்.. சாந்தமான குலதெய்வமாக இருந்தால், அதை வீட்டில் வைத்து வழிபடலாம். உக்கிரமான தெய்வமாக இருந்தால், வீட்டில் அந்த போட்டோவை வைக்கக்கூடாது என்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+