உடைந்த சுவாமி படங்கள், சேதமடைந்த கடவுள் சிலையை என்ன செய்வது? பழைய பூஜை சாமான்களை பயன்படுத்தலாமா? ஓஹோ
சென்னை: வீட்டிலுள்ள பூஜை பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும்? பூஜை பொருட்கள் பழையதாகிவிட்டால் அவைகளை பயன்படுத்தலாமா? பிறருக்கு பூஜை பொருட்களை இரவல் தரலாமா? பழைய கடவுள் படங்களை என்ன செய்வது? சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே பூஜை சார்ந்த பொருட்களை மிகவும் பத்திரமாகவும், சுத்தமாகவும் பராமரித்து வரவேண்டும். குறிப்பாக, ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பூஜை பொருட்களை பராமரிக்க வேண்டும். குடும்பத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள், பராமரிக்கும்போது, தோஷம் ஏற்பட்டுவிடுமாம்.

பூஜை பொருட்கள்: அபிஷேகங்கள் செய்யாமல் இருக்கும் வீட்டில், லட்சுமி புக மாட்டாள் என்பார்கள். எனவே, பூஜை பொருட்களின் மீது எக்காரணம் கொண்டும் தூசு படிய விடாமல், பூஜைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பூஜை செய்யும்போதும், பூஜை பொருட்களை சுத்தமாக கழுவி துடைத்தே பயன்படுத்த வேண்டும்.
அதேபோல, சாளக்கிராமம், கோமதி சக்கரம், பானலிங்கம், ஸ்ரீ சக்கரம், வலம்புரி சங்கு, மஹாமேரு போன்ற பொருட்களையும் பயன்படுத்தாமல் போட்டு வைக்கக்கூடாது.
பொக்கிஷம்: பூஜை பொருட்கள் பழையதாகிவிட்டால், அவைகளை பயன்படுத்த கூடாது.. அப்பொருட்களை எல்லாம் சுத்தமான துணியில் மூட்டையாக கட்டி எங்காவது ஒரு இடத்தில் வைத்து பாதுகாக்கலாம். அதுக்காக பரணில் போட்டு வைக்கக்கூடாது. பொக்கிஷம் போல காத்து வரவேண்டும். அல்லது இந்த பழைய பூஜை பொருட்களை கடையில் கொடுத்துவிட்டு, புதிய பூஜை பொருட்களை மாற்றிக்கொள்ளலாம். இதனால் தோஷம் எதுவும் ஏற்படாது.
சிலர், தாங்கள் வீடுகளில் பயன்படுத்தும், உலோகத்திலான பூஜைப்பொருட்களை, பிறருக்கு தானமாக தருவார்கள்.. இதை கட்டாயம் தவிர்க்க வேண்டுமாம். காரணம், உங்கள் குடும்பத்திலுள்ள நேர்மறை ஆற்றல் அப்படியே அவர்களுக்கு சென்றுவிடும். எனவே, புதிய பூஜை பொருட்களை தானம் தரலாம். அதிலும் பெண்களுக்கு தானம் தரும்போது, குல விருத்தியே உண்டாகுமாம்.
கடவுள் சிலைகள்: கடவுள் சிலைகளை பராமரிக்க முடியாவிட்டால், அவைகளை கோவில்களுக்கோ அல்லது கோவில் மடங்களுக்கோ தானமாக தரலாம்.. அல்லது கடலில் போட்டு விடலாம். அதேபோல, பழைய உடைந்த சுவாமி படங்களையும் கோவில்களில் வைத்து விடலாம்.. பூஜை அறையில் இருக்கும் கடவுள் படங்கள் உடைந்திருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலும் அதனையும் வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக கோவில்களில் கொண்டு போய் வைத்துவிட வேண்டுமாம்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications