கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை.. காணாமல் போக வைக்கும் சிம்பிள் பரிகாரம் எப்படி செய்வது?
சென்னை: கடன் இன்றைக்கு பாடாய் படுத்துக்கிறது. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் இலங்கை வேந்தன் என்று சொல்வார்கள். வருமானம் இல்லாவிட்டால்தான் கடன் வாங்க வேண்டியிருக்கும். பண வருமானம் வருவதில் ஏற்படும் தடைகளை உடைக்கவும், கடன் பிரச்சினை தீரவும் எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது. வீட்டில் இருந்தே அதை ஈஸியாக செய்யலாம்.
வாழ்க்கையில் கடன் வாங்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். யாராவது எதற்காகவாவது கை நீட்டி பணத்தை கடனாக வாங்குவார்கள். கடனே வாங்காமல் சிலர் குடும்பம் நடத்தி பழகிக்கொள்வார்கள். சிலரோ கடனை உடனை வாங்கியாவது ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துவார்கள் காலத்திற்கும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருப்பார்கள்.

ருணம், ரோகம் சத்ரு இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. ருணம் என்றால் கடன், ரோகம் என்றால் நோய் சத்ரு என்றால் எதிரிகள். ஏழைகளுக்கு ஆயிரக்கணக்கில் கடனும் கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கில் கடனும் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு கடன் இருந்தால் தூக்கம் வராது. ஒரு சிலருக்கு கடன் இல்லாவிட்டால் தூக்கம் வராது. சில நாட்களில் வாங்கும் கடன் தீரவே தீராது மலைபோல வளர்ந்து கொண்டே செல்லும். வட்டி மேல் வட்டி கட்டி மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இஎம்ஐ என்ற மெல்ல கொல்லும் விஷம் போல கடன் அரித்து எடுத்து விடும்.
ராகுகாலம், எமகண்டம் போல குளிகை நேரம் என்று ஒன்று உள்ளது. இந்த நேரத்தில் கடன் வாங்கக் கூடாது. இந்த நேரத்தில் வாங்கும் கடன் வளர்ந்து கொண்டே இருக்கும் அடையவே அடையாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கும் போது குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைந்து விடும்.
குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே கோச்சார ரீதியாக குரு பகவான் ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு சர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்க கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.
கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும் பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்க வேண்டும். செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்க வேண்டும். செவ்வாய்கிழமையில் நாம் செய்யும் எளிமையான பரிகாரம் மலை அளவு கடனை கூட காணாமல் போக வைக்கும்.
வீட்டு கிச்சனில் உள்ள துவரம் பருப்பை சின்ன கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அந்த துவரம் பருப்பின் மீது செவ்வரளி பூக்களை வைக்க வேண்டும். 3 பூக்கள் அரளி பூக்கள் போது. முருகனுக்கு இரண்டுமே பிடித்தமானது. செவ்வாய் பகவானுக்கும் அரளியும், துவரம் பருப்பும் பிடித்தமானது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து கந்தா, கடம்பா, கார்த்திக்கேயா என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
துவரம் பருப்பு வைத்து வழிபாட்டை முடித்த பின்னர் கிண்ணத்தில் இருக்கும் பருப்பை மறுநாள் பறவைகளுக்கு இரையாக வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு இதை தண்ணீரில் ஊற வைத்து கொடுத்து விட வேண்டும். இந்த பரிகாரம் செய்து வர தீராத கடன்களை தீர்ப்பதற்கான வருமானத்திற்கு வழி ஏற்படும்.
இந்த துவரம்பருப்பு அரளிப்பூ பரிகாரத்தை 9 செவ்வாய்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த துவரம் பருப்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. இந்த பரிகாரம் செய்து வந்தால் உங்கள் பண பிரச்சினை படிப்படியாக குறையும். உங்களுக்கு கடன் தீர கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். கந்த சஷ்டி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்க வேண்டும். நம்பிக்கையுடன் மனதார வேண்டிக்கொண்டால் நம்முடைய மன கவலைகளை கந்தன் போக்குவான்.
ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும். சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்கள் தீரும். பணம் வரும் போது செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications