வர்றாரா பால்காரர்? நாய் குறுக்கே ஓடுதா? எது நல்ல சகுனம், கெட்ட சகுனம் தெரியுமா? அடடே இதுல இவ்ளோ இருக்கா?
சென்னை: நல்ல சகுனம், கெட்ட சகுனம் இன்றும்கூட பெரும்பாலானவர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. பறவைகள், விலங்குகளை கொண்டும், சகுனங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த விலங்குகள், பறவைகள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலும் நாம் வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம் என்கிறோம்.. ஆனால், பூனையானது வலமிருந்து இடமாகவும் குறுக்கே பாய்ந்தால் நல்ல சகுனமாம்.

ஆந்தை: ஆந்தை நம்முடைய பாதையில் வந்தால், ஏதோ குழப்பமான சூழலில் சிக்க போகிறோம் என்று அர்த்தமாம். நாம் செல்லும் வழியில், காகம் இடமிருந்து வலமாக சென்றால் நன்மை உண்டாகும். ஆனால், வலமிருந்து இடம் சென்றால், நாம் செல்லும் காரியம் வெற்றி பெறாது என்பார்கள்.
அதேபோல, எண்ணெய், நெய், சலவை செய்யப்பட்ட துணி மூட்டை, வேடன், குரங்கு, பாம்பு, கழுதை, ஆடு, பன்றி, நெருப்பு, ஏணி, போன்றவையெல்லாம் வந்தால், பயணத்தில் தடைகள் ஏற்படுமாம்... எனவே எந்த இருந்தும் பாம்பு, பூனை, பன்றி, முயல் போன்றவை குறுக்கே தென்படக் கூடாது.
விதவை, மாதவிலக்கான பெண், அவிழ்ந்த தலை, மொட்டைத்தலை, பைத்தியக்காரன், சன்னியாசி, ஒற்றை பிராமணன், விறகு கட்டு, உப்பு, அரிவாள், கோடாரி, கடப்பாரை போன்றவை கண்ணில் தென்பட்டால் கெட்ட சகுனம் என்பார்கள்.
அறிகுறிகள்: வெளியில் கிளம்பும்போது, வாயில் கயிறைக் கவ்விக்கொண்டு நாய் வந்தால், வீட்டில் பணம் சேருமாம். பயணம் கிளம்பும்போது, நாய் எதிரில் வருவது நல்லது.. வலமிருந்து இடப்புறத்தில் பாய்வதும் நல்லது. ஆனால், நம் மீது தாவி ஏற முயல்வதும், நம் கால்களை மிதிப்பதும் கூடாது...
நாய்கள்: நாம் புறப்படும்போது நாம் வளர்க்கும் நாய்கள், குறுக்கே நின்று குரைப்பது, ஏதோ கெட்ட அறிகுறியை குறிப்பதாகும்.. வழியில் திருடர்களால் தொல்லை ஏற்படும்... அதேபோல, நாய் நம்முடைய கால்களை நக்கினால் பயணத்தில் தடைகள் ஏற்படும்.
பயணம் கிளம்பும்போது, எதிரில் சுமங்கலிப்பெண் வருவது நல்லது.. மலர்கள், விசிறி, பால், பழங்கள், மஞ்சள், குடை, வளையல்கள், பசு, மான், கிளி, முகம் பார்க்கும் கண்ணாடி, தயிர், மோர், யானை, மயில் இப்படி வருவதெல்லாம் நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.. நாம் செல்லும் காரியம் சுபமாக முடியும் என்று அர்த்தமாம். பாதையில் பல்லி வந்தாலும், சிலந்தியை பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கன்றுடன் கூடிய பசு வந்தால் நல்ல விஷயமே..
ஆலய மணி: நாம் வெளியில் கிளம்பி செல்லும்நேரம் ஆலய மணி ஒலித்தாலோ, போனில் மணி ஒலித்தாலோ , போகிற காரியம் சுபம் தரும்.. தெருவில் வரும்போது, எதிரில் பால்காரராக வந்தாலோ அல்லது யாராவது பால்கொண்டு வந்தாலோ, நல்ல வருமானம் கிடைக்கும் என்று அர்த்தமாம். அதிலும் தண்ணீர் குடம் ஏந்தி எதிரில் வந்தால், நாம் செல்லும் காரியம் முழு வெற்றியை தருமாம்.
சுமங்கலிப்பெண், கன்னிப்பெண், சங்குநாதம், மங்கலவாத்தியம், நிறை குடம், தாசி, வேத ஓசை, மணமக்கள், அட்சதை, கட்டுச்சோறு, பூக்கள், பழங்கள், அரசன், நெருப்பு, மாமிசம், முத்து, தேன், குடை, சாமரை, கொடி, கரும்பு, கழுதை, இவையெல்லாம்கூட நல்ல சகுனங்கள் என்பார்கள்.












Click it and Unblock the Notifications