ஜோதிடர்கள் யார் கணித்தாலும் 99%தான் பலிக்குமாமே! இது உண்மையா?கிருஷ்ணர் சொன்னது என்ன?
சென்னை: ஜோதிடக்காரர்கள் யார் கணித்தாலும் 99 சதவீதம்தான் ஜோதிடம் பலிக்கும் என்பது தெரியுமா? இதற்கு மகாபாரதத்திலேயே நல்ல உதாரணம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின் மீது பலருக்கு நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இருக்காது. ஒருவர் பிறந்த நேரம், ஊர், பிறந்த தேதி தெரிந்துவிட்டால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம் என ஒரு சிலர் ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் 99 சதவீதம்தான் பலிக்கும் என்ற உண்மை ஒன்று உள்ளது. இதை மகாபாரதத்தில் வரும் உதாரணத்துடன் தெரிந்து கொள்ளலாம். துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்கிறார்.
அதற்கு சகாதேவனும் நாள் குறித்து கொடுக்கிறார். அந்தளவுக்கு சகாதேவன் ஜோதிடக் கலையில் உண்மையாக இருந்தார். போரில் கர்ணன் இறக்கும்போதுதான் கர்ணண்தான் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை சகாதேவனுக்கு தெரியவந்தது.
இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என ஜோதிடத்தில் நம்பிக்கை இழந்தார். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, "கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறார்.
அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா? என சொல்கிறார்... ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.
அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன், அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டதால் பிறகு நான் எதற்கு?
இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கி வாரி போட்டது. ஜோதிடத்தை விட இறைசக்திதான் பெரியது என்பதை உணர்ந்தார் சகாதேவன், எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் நிச்சயம் அவர்களால் 99 சதவீதம் மட்டுமே தங்களால் கணிக்க முடியும்.
இதன் காரணமாகத்தான் விதி என்பதை கூட இறைவன் மீது நம்பிக்கை வைத்து மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர் கூறினர். ஜோதிடத்தில் முழுவதுமாக மூழ்கி விடாமல், இறைவனுடன் முழுமையாக அர்ப்பணிப்புணர்வுடன் இருந்தாலே ஜோதிடத்தின் பலனையும் பெறலாம்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications