கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது..பிரச்சினைகள் சிதறிப்போக..தடைகளை உடைக்க இதை செய்தால் போதும்
சென்னை: வெளிநாடு சென்று கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். பாஸ்போர்ட் எடுத்தும் விசா கிடைத்தும் சிலரால் வெளிநாடு வேலைக்கு செல்ல முடியாது. பொறாமை, கண் திருஷ்டியால் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கும். அந்த தடையை உடைக்க ஆன்மீகத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. தோஷங்கள் நீங்கவும் கண் திருஷ்டிகள் விலகவும் கூறப்பட்டுள்ள எளிமையான இந்த பரிகாரங்களை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். நன்றாக வாழ்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சலில் பொங்கி சாவார்கள் சிலர். சிலரது கண் திருஷ்டி உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். சிலரது கண் திருஷ்டி காரியத்தடைகளை ஏற்படுத்தும். தோஷங்களாலும் கண் திருஷ்டியாலும் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகரை சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை.

விக்னங்களை உடைப்பவர் விநாயகர். காரிய தடைகளை நீக்க விநாயகரை வணங்கினாலே போதும். விநாயகருக்கு சிதறுகாய் உடைத்தால் போதும் தடைகள் யாவும் சில்லு சில்லாக சிதறி போகும். தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும் .
தேங்காய் சக்தி நிறைந்தது. இறைவழிபாட்டிற்கு ஏற்றது. நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது, இது சித்தர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகிணி , ஹஸ்தம், திருவோணம், நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது, அது உடைந்து சில்லுச்சில்லாகச் சிதறி ஓடும். அது போல விநாயகரின் அருளால் நம்மைப் பீடித்திருக்கும் தோஷங்களும், பாவங்களும், விக்னங்களும் வேதனைகளும் இந்தக் காய் உடைந்து சிதறுவது போல, நம்மை விட்டு சிதறி ஓடும். தடை நீங்கும் என்பது ஐதீகம்.
இந்துக்களின் வழிபாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆலயங்களில் சாமி சிலைகளின் முன்பாக தேங்காய் உடைப்பதன் மூலம் நமக்கு இறை ஆற்றல் எளிதில் கிடைக்கிறது. அதே போலத்தான் விநாயகருக்கு பல காய்களை சிதறுகாய்களாக போடும் போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். அந்தி மயங்கும் மாலை நேரத்தில் முச்சந்தியில் சிதறுகாய் போடும் போது அங்கே துர்சக்திகள் விரட்டப்படுகிறது.
ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில், முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் போடுவதன் மூலம் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும். வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்.
செய்வினை கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை நேரத்தில் பூஜை அறையில் தேங்காயை உடைத்து தலைவாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும், மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம். இதன் மூலம் செய்வினை கோளாறுகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் குங்கும பொட்டு வைத்து வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்டி கழிந்து விடும்.
வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகிணி , ஹஸ்தம், திருவோணம், நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும். விசா விநாயகரையும் பாஸ்போர்ட் விநாயகரையும் வழிபாட்டால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அந்த காலத்தில் மன்னர்கள் எல்லாம் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாட்களில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவார்கள் போர்களில் பெற்றி பெறுவார்களாம்.












Click it and Unblock the Notifications