For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய பைரவர்.. கோலாகலமாய் நடக்கப்போகும் மகா கும்பாபிஷேகம்..பக்தர்களுக்கு அழைப்பு

உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா எப்போது தெரியுமா?

Google Oneindia Tamil News

ஈரோடு: உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழா 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளனர். ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். இதுவரை எந்த கோவில் கும்பாபிஷேகத்திலும் இல்லாதவாறு, நம் கோவிலில் மக்கள் பார்வையாளராக மட்டுமல்லாமல் தாங்களும் ஒரு அங்கமாக கலந்து கொண்டு, அபிஷேக ஆராதனை செய்யும் வாய்ப்பு இருப்பது தனிச்சிறப்பு.

சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் வரண ஆவஹர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோடு அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள, இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமந்திருப்பது தனிச்சிறப்பு.

Erode Worlds largest Bhairava temple Maha Kumbabhishekam to be held in a big way

இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த unique book of world record எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமீபத்தில் ராட்டை சுற்றிபாளையம் பைரவர் கோயிலில் சிறப்பான முறையில் விழா நடந்தது. அதில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, பஞ்சாப் யுனிக் சாதனை புத்தகம் சார்பில் தென்னக பொறுப்பாளர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் தென்னக காசி பைரவர் திருக்கோயிலுக்கான உலக சாதனை விருதை பைரவ பீடம் ஸ்ரீ விஜய் சுவாமிஜிக்கு வழங்கினர். இதற்கு பொதுமக்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்டத்தில் கால பைரவர் சிலை அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க செயல்.

Erode Worlds largest Bhairava temple Maha Kumbabhishekam to be held in a big way

கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் தற்போதே பக்தர்களும், பொதுமக்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கால பைரவர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். மிகப்பெரிய சுற்றுலா தலமாக கால பைரவர் கோயில் விளங்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

உலகத்தில் மிகப்பெரிய சிலையாக உள்ள கால பைரவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி, மொடக்குறிச்சி எம்எல்ஏ., சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ., ஆர்.எம்.பழனிசாமி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவருமான சு.குணசேகரன் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கோவிலின் திருப்பணியானது, ஏழு வருடங்களாக குருமார்களின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்று வந்த நிலையில், வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி மாசி 29 திங்கட்கிழமை காலை 10:18 மணிக்கு 'மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். இதுவரை எந்த கோவில் கும்பாபிஷேகத்திலும் இல்லாதவாறு, நம் கோவிலில் மக்கள் பார்வையாளராக மட்டுமல்லாமல் தாங்களும் ஒரு அங்கமாக கலந்து கொண்டு, அபிஷேக ஆராதனை செய்யும் வாய்ப்பு இருப்பது தனிச்சிறப்பு. இக்கோவிலின் மூலவரான ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் ஆரோக்கியத்திற்கும், செல்வ வளத்திற்கும் ஆன அட்சய பாத்திரத்தை கையில் ஏந்தியவாறு அமையப் பெற்றுள்ளார்.

Erode Worlds largest Bhairava temple Maha Kumbabhishekam to be held in a big way

நாம் எதை முழு மனதாக அர்ப்பணிக்கிறோமோ அதை பல மடங்காக பெருக்கி கொடுக்கும் வல்லமை பெற்றவர். நம் ஆலயத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள 60 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும் நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்படும் என்பது நம்பிக்கை.

2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்

நான்கு கால பூஜை

10.03.2023 மாசி மாதம் 26-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொது மக்களால் நெய் அபிஷேகம்

11.03.2023 மாசி மாதம் 2-ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை ஆரம்பம்.

11.03.2023 மாசி மாதம் 27-ம் நாள் சனிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு தீர்த்தம் அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொது மக்களால் தீர்த்தம் எடுத்து வருதல், தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை, கிராமிய நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும்.

12.03-2023 மாசி மாதம் 28- ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா.

13.03.2023 மாசி மாதம் 29ஆம் நாள் திங்கட்கிழமை காலை மணிக்கு நான்காம் கால பூஜை. 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை 10.03.2023 வெள்ளி முதல் 13.03.2023 திங்கள் வரை அன்னதானம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The administrator of Swarna Bhairava Peedam Trust has said that the Maha Kumbabhishekam ceremony of the world's largest Bhairava temple is planned to be held in March 2023. It is believed that participating in a Kumbabhishekam removes the sins of three generations. Unlike in any other temple Kumbabhishekam so far, it is unique that in our temple people have the opportunity to participate as a part of the abhishekam and not just as a spectator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X