அடிக்கடி செலவு..பணத்தை சேமிக்க முடியலையா? இந்த ஒரு பொருள் போதும்.. பணம் வீட்டில் நிறையும்!
சென்னை: எப்படி பிறப்பு இறப்பின் அறிகுறியோ, மோசமான உடல்நிலை நோயின் அறிகுறியோ, அதேப் போல் ஒருவர் சந்திக்கப் போகும் நிதி பிரச்சனையும் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிக்காட்டும். இங்கு இனிமேல் உங்கள் கையில் பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு பணம் தண்ணீராக செலவாகும். செலவைக் கட்டுப்படுத்தி பணத்தை சேமிப்பதற்கான பரிகாரங்கள் உள்ளன அவற்றை கடைபிடித்தால் வீண் செலவு கட்டுப்படும்.
எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ உங்களுக்கு செலவுகளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அர்த்தம். தேவையற்ற வீண் செலவுகளால் பணம் செலவாகப்போகிறது என்றும் அர்த்தமாகும்.
தம்பதியருக்குள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சண்டைகள் வந்தவாறு இருந்தால் வீட்டில் செல்வ வளம் குறையப் போகிறது என்று அர்த்தம். சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில்தான் மகாலட்சுமி வாசம் செய்வார்.

நிதிப்பிரச்சினை
வீட்டின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்தால், அதுவும் அந்த வீட்டில் உள்ள குடும்பம் கடுமையான பணப் பிரச்சனையால் கஷ்டப்படப் போகிறது என்று அர்த்தம். அதே போல நம்முடைய வீட்டில் குளியலறை, பாத்திரம் கழுவும் சிங்க் போன்றவற்றில் உள்ள குழாய்களில் தண்ணீர் வீணாக ஒழுகினால் நிதிப்பிரச்சினை வீண் செலவு வரப்போகிறது என்று அர்த்தம்.

எண்ணெய் சிந்தக்கூடாது
கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் வந்தால், அது உங்கள் சேமிப்பு முழுவதையும் காணாமல் செய்யப் போகிறது என்று அர்த்தம். வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் தெரியாமல் சிதறினால், அதுவும் அந்த குடும்பம் பணப் பிரச்சனையை சந்திக்கப் போவதைக் குறிக்கிறது.

தண்ணீர் சிக்கனத்தால் பணம் வரும்
தேவை இல்லாமல் தண்ணீரை செலவு செய்யக்கூடாது. வீட்டு குழாயில் தண்ணீர் சிந்தாமல் மூடிவைக்க வேண்டும். இந்த பரிகாரங்களைச் செய்தால் பணப்பிரச்சினை நீங்கி செல்வம் பெருகும். மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபடுங்கள். வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் யாரும் தூங்கிக்கொண்டிருக்க கூடாது. தீப வழிபாடு செய்வதோடு, சிலவற்றை கடைபிடிப்பது அவசியமாகிறது.

உடைந்த பொருட்களை தூக்கி வீசுங்கள்
வாங்கிய கடன் தீரவும் திருப்பவும் கடன் பெறாமல் இருக்கவும், பணப்பற்றாக்குறை நீங்கவும், சேமிப்பு உயரவும் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். வாஸ்து தோஷம் காரணமாகவும் பணம் வரும் வாய்ப்பு அடைபடும். உடைந்த நாற்காலி, சோபா, பெட் ஆகிய பொருட்களை வீட்டிற்குள்ளேயோ, பிறர் கண்பார்வையில் படும்படியோ வைக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டார்.

மகாலட்சுமியின் அம்சம்
மகாலட்சுமியின் பிறப்பிடமான கடலில் தோன்றிய காரணத்தால், நமது நாட்டில் ஆன்மிக பயிற்சி மற்றும் பூஜைகளுக்கு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வீட்டில் மகாலட்சுமிக்கு உரிய பூஜைகளை செய்யும்போது சோழிகளை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, நவராத்திரி காலங்களில் வீடுகளுக்கு வரும் பெண்கள், தேவியின் வடிவமாக கருதப்பட்டு மஞ்சள், குங்குமத்தோடு சோழிகளை வழங்குவதும் நமது நாட்டில் பல இடங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

அதிர்ஷ்டம் தரும் சோழிகள்
உலகின் பல நாடுகளில் அதிர்ஷ்டத்துக்காக ஆடைகளில் கோர்த்து அணிவது, மாலையாக அணிவது, மோதிரமாக அணிவது, இடுப்பில் அணிவது என்று ஆபரணமாக சோழிகள் பயன்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் சோழிகளால் தயாரிக்கப்பட்ட மாலையை தலையை சுற்றி அணிவதால், பொருளாதார வளம் பெருகும் என்றும், ஆடைகளில் கோர்த்து அணிவதால் ராஜ சன்மானம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. உலகின் பல நாடுகளில் திருமணத்தின்போது, சோழிகள் கோர்க்கப்பட்ட ஆடைகள் அணிவதும், பரிசாக தருவதும் நடைமுறையில் இருக்கிறது.

விநாயகருக்கு வெற்றிலை மாலை
கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாக கட்டி அணிவிக்கவும். கேதுவையும் விநாயகரையும் வழிபட வேண்டும். கேதுவுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம் செய்யவும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம் அணிவிக்கவும். எருக்கம்பூ மாலையும் அணிவிக்கலாம். பால் சாதம், தயிர் சாதம், மற்றும் நவதானிய வகைகளை வேகவைத்து சுண்டலாக செய்து படைக்கவும். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதோடு முடிந்த வரை அன்னதானம் வழங்கவும். மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications