திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 5 கி.மீ. தூரத்திற்கு காத்திருந்த இலவச தரிசன பக்தர்கள்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் எத்தனை மணி நேரம் காத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர்.
இப்படி திருப்பதி பணக்கார தெய்வம் என சொல்லப்பட்டாலும் புரட்டாசி மாதமும் சனிக்கிழமைகளிலும் ஏழைகள் போடும் படையலை பெருமாள் ஏற்று அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தை காக்கிறார். கோடி கோடியாக யார் கொட்டி கொடுத்தாலும் ஏழைகளுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் திருமலை ஏழுமலையானை காண லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதனால் திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது. அது போல் வார விடுமுறை என்பதாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர்.
அவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்தே ஏழுமலையானை தரிசித்தனர். அது போல் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்தவர்கள் 3 முதல் 5 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அது போல் உண்டியல் வசூலும் அதிகமாகவே இருந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications