புனித வெள்ளி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துக்க தினம்.. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாள் புனித வெள்ளி. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. மக்களுக்காக துயரத்தை சுமந்து சிலுவையில் அறையப்பட்டு இயேசு பிரான் உயிரை துறந்த துக்க நாள் இன்று.

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மரணித்த நாளாக இருப்பினும் இதனை கிறிஸ்தவப் பெருமக்கள் புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றனர். இயேசு பிரானின் கடைசி உணவு உண்ட இரவு பெரிய வியாழன் என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. பெரிய வியாழனில் இருந்து துக்க காலம் தொடங்கி ஈஸ்டர் தினம் - அதாவது இயேசு பிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் வரை நீடிக்கும். மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவின் வெளிப்பாடான நாளாக இருப்பதால் இதனை புனித வெள்ளி என்கின்றனர் கிறிஸ்தவப் பெருமக்கள்.
இந்த புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர். இன்று பிற்பகல் 3 மணி வரை மவுனத்தைக் கடைபிடிப்பர். அனைத்து தேவாலயங்களில் மாலையில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவப் பெருமக்கள் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகள் தேவாலயங்களில் செய்யப்பட்டுள்ளன.
தேவாலயங்களில் சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாக காட்சி தரும். பிற்பகல் 3 மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து என 3 பகுதிகளாக இந்த வழிபாடு நடைபெறும்.
இது தொடர்பாக கிறிஸ்தவப் பெருமக்கள் கூறுகையில், இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில் மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள். எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர். பின் குருவும் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்று, கைகுவித்து இறைவா, உம் திருமகன் கிறிஸ்து உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறை நிகழ்ச்சியை நிறைவேற்றினார். அவரது சாவிகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள் எங்கள் சிந்தனை, சொல, செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள். எல். ஆமென் என பிரார்த்திப்பர். மேலும் "இரக்கமுள்ள இறைவா, முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றோம். எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர். இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்,உமது அருளால் புனிதமடைந்து, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம் எனவும் வழிபடுவர் என்றனர். (நன்றி உதவி: (https://bibleintamil.com/prayer/u_goodfriday.html).
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications