இன்று அனுமன் ஜெயந்தி! ஆஞ்சநேய வீரரை எந்த நேரத்தில், எப்படி வழிபடுவது? யாரெல்லாம் வணங்கலாம்?
சென்னை: ராமபிரானின் பக்தரான அனுமன் அவதரித்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ஆஞ்சநேயரின் அருள் கிடைக்க அவரை எப்படி வணங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆஞ்சநேயர் என்றாலே ராவணன் பிடியில் இருந்த சீதாபிராட்டியை மீட்டது, சஞ்சீவ மலையை தூக்கிக் கொண்டு சென்றது என அவரது வீரம் வெளிப்படும். அது போல் பாசத்தில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ராமர் மீது பாசத்தையும் விசுவாசத்தையும் பக்தியையும் காட்டியவர்.

ஆஞ்சநேயருக்கு புத்திக் கூர்மை அதிகம் இருக்கிறது. ராமாயணத்தின் ஆணிவேரே அனுமன் என சொல்லலாம். ஆஞ்சநேயரின் திறமைகள் குறித்து விளக்கும் பகுதிதான் சுந்தரகாண்டம். இதை படித்தாலே துன்பங்கள் தீரும். அது போல் மனமுறுகி பிரார்த்தனை செய்தால் அள்ளி கொடுப்பதில் அனுமன் வள்ளல்.
அனுமன் அவதரித்த தினத்தையே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அவர் மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அனுமன் அவதரித்த நாளாகும். இந்த அனுமன் ஜெயந்தி ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஏற்கெனவே வந்துவிட்டது.
தற்போது டிசம்பர் 30ஆம் தேதியான இன்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றைய தினம் காலை 4.44 மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி காலை 5.03 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அது போல் டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 01.12 மணி வரை மூல நட்சத்திரம் உள்ளது.
இன்றைய தினம் அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணைவதால் இன்று முழுவதுமே அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்கு சிறந்ததாகும். அனுமன் ஜெயந்தியை யாரெல்லாம் கொண்டாடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கல்விக்கு உரிய கிரகமான சூரியனிடமே கல்வியை கற்றார் அனுமன். படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் உயர்பதவி கிடைக்கவும் சிறந்த பேச்சாற்றலை பெறவும் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை மனதார வழிபடலாம். கர்ப்பிணிகள் இன்றைய தினம் சுந்தரகாண்டம் படிப்பதால் அனுமனை போல் வீரமான ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
இன்றைய தினம் அனுமன் சாலிசா , சுந்தரகாண்டம் படிக்கலாம். முடியாவிட்டால் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும், "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே" என ராம மந்திரத்தை சொன்னால் ராமனின் அருளும் அனுமனின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதை காண பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் வாசலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications