சனிதோஷம் நீக்கும் குபேர வீர ஆஞ்சநேயர்..விரதமிருந்து ராம நாமம் எழுதினால் நினைத்தது நிறைவேறும்
சென்னை: எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அஞ்சனை மைந்தன்..வாயு புத்திரன் அனுமன் இருப்பார் என்று கூறப்படுகிறது. சனிபகவானை வெற்றிகொண்ட குபேர வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். அனுமன் ஜெயந்தி நாளில் ராம நாமம் கூறினாலே..ராம நாமத்தை எழுதினாலே நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை
மார்கழி அமாவாசை நாள் அஞ்சனை மைந்தன் அனுமன் அவதரித்த நாளாக போற்றப்படுகிறது. அனுமனை வேண்டி விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும்.
எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாட்களையும் விட அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. அவருக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து வழிபடலாம்.
அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபிக்கலாம். ராம நாமத்தை எழுதலாம்.
திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம் இருந்தார். அவர் முன்பு தோன்றிய சிவபெருமான்..'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்' என்று வரமளித்தார்.

அனுமன் அவதாரம்
ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு மகள் பிறக்க அவளுக்கு அஞ்சனை என்று பெயரிட்டார். பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. தனக்கு பிள்ளை பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினாள் அஞ்சனை. அப்போது தர்மதேவதை அவள் முன்தோன்றி, 'அஞ்சனையே நீ திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய் என்று ஆசி கூறினார்.
தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று அழைக்கப்படுகிறார்.
அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

சனி தோஷம் நீங்கும்
சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.
காலையில் விரதம் இருந்தவர்கள் மாலையில் அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றி வணங்கலாம். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

தோஷங்கள் நீங்கும்
ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.
சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்யலாம். வாஸ்து கோளாறு உள்ள வீட்டின் வாசல் படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

குபேர வீர ஆஞ்சநேயர்
ராணி பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காமாக்ஷி புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஹனுமத் ஜெயந்தி விழா நாளை நடைபெற உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் 221 கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் லிகித ஜப மந்திர பிரதிஷ்டையாக செய்து விசேஷமான இந்த ஆலய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அகத்திய சித்தர் திருக்கரத்தால் சிவலிங்கம் பிடித்து வழிபாடு செய்த அகஸ்தீஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில் இன்றைய வாலாஜாபேட்டையில் நான்கு திசைகளிலும் ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.
முன்பொரு காலத்தில் இந்த ஊரில் நிறைய நோய்வாய்ப்பட்டு பல கஷ்டங்களை மக்கள் அனுபவித்து வந்தனர் அப்போது இருந்த மகான்கள் நகருக்கு நான்கு திசையிலும் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள். பிறகு அந்த ஊரின் குறை நீங்கி வளம் பெற்றதாக வரலாறு. அப்படி ஊருக்கு வடக்கு திசையில் வடக்கு நோக்கி இந்த அனுமன் ஆலயம் இருப்பதால் இவருக்கு ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் என்ற திரு நாமம் ஏற்பட்டது.
வடக்கு என்பது குபேர ஸ்தானமாகும் ஆதலால் இவரை வழிபட்டால் குபேர சம்பத்து உண்டாகும் அதே போல் ஹனுமான் தலைக்கு மேல் வால் மணியுடன் இருப்பது மிகவும் சான்னித்யமான சன்னதி
நினைத்தது உடனே நிறைவேறும் தன்மை அதற்கு உண்டு. உலகிலேயே சில இடங்களில் மட்டும் தான் இது போன்ற சன்னதி இருக்கும் அந்த தோற்றத்தில் சுயம்பு மூர்த்தியாக இந்த சுவாமி இருப்பது கூடுதல் விசேஷம்.
அது மட்டும் இல்லாது இங்கு கிருஷ்ண தேவராயர் ராஜா வழிபாடு செய்த நாக தோஷம் கால சர்ப தோஷம் ராகு கேது தோஷத்தை நீக்கும் 3 நாகர் சன்னிதியும் உண்டு. இத்திருப்பணியின் போது நவக்கிரஹ கோட்டை எனும் 9 தனி தனி சன்னதியுடன் பத்னி வாகன சஹிதம் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் நவக்கிரஹ தோஷங்களை போக்கும் நவக்கிரஹ சன்னதி பிரதிஷ்டையும் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மற்றும் மஹா பெரியவா தியான மண்டபமும் திருப்பணி யாக நடைபெறுவது இந்த ஆலயத்தின் தனிப்பெரும் சிறப்பாகும்.

ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீராமஜெயம் என்னும் புனிதமான ராமநாமத்தை ஒருமுறை சிந்தித்தாலே எண்ணற்ற நற்பலன்கள் உண்டாகும் என்பர். ஆஞ்சநேயர் பிறந்த நாளில் ராம நாமம் எழுதினால் விரைவில் பலகோடி செல்வ வளங்களும் உண்டாகும் என்பது சர்வ நிச்சயம். செல்லம் பெருக, கடன் தீர, உத்யோகம், தொழில்,வியாபாரம், பணபிரச்சனை, திருமணம், குழந்தை பாக்கியம்,நோய் விலக, சனி தோஷம் நீங்க, தசா புத்தி தோஷம் நீங்க, நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற,எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக,கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி அதிகரிக்க, மனபயம் நீங்க,திக்கு வாய் பிரச்சினை நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம்,ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலி தன்மை எதிலும் வெற்றி அடைய,அரசு வேலை,அரசியலில் வெற்றி,வாக்கு பலிதம்,கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக ஸ்ரீராமஜெயம் எழுதலாம்.
அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications