உங்கள் கர்மாக்களை எப்படி குறைக்கலாம்? 15 பாயிண்டுகள் முக்கியமாச்சே!
சென்னை: உங்களது கர்மாக்களை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த சிம்பிளான காரியங்களை செய்யலாம். அதுவே கர்மாக்களை குறைக்க போதுமானது என ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: உங்களது கர்மாக்களை எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்.

(1) பறவைகளுக்கு நீர் வைத்தல், தானியங்கள் வைத்தல்
(2) நாய்களுக்கு உணவளித்தல்
(3) மீன்களுக்கு உணவளித்தல்
(4) குரங்குகளுக்கு உணவளித்தல்
(5) குதிரைகளுக்கு உணவளித்தல்
(6) யானைகளுக்கு உணவு அளித்தல்
(7) பசுக்களுக்கு உணவளித்தல்
(8) ஆடுகளுக்கு உணவளித்தல்
(9) தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தல்
(10) சகோதர, சகோதரிகள் அவர்கள் கஷ்டப்படும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும்
(11) கர்ப்பஸ்திரிகளுக்கு
(12) ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும்
(13) நோயளிகளுக்கு மருந்து வாங்கி கொடுப்பது
(14) மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல்
(15) திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.
சரி இனி ஆன்மீக ரீதியாக பார்ப்போம் :-
(1) கோயில் மயில்களுக்கு
(2) கோயில் காகத்திற்கு
(3) கோயில் சேவல்களுக்கு
(4) கோயில் யானைகளுக்கு
(5) கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு
(6) கோயில் பூசாரி
(7) பிராமணர்களுக்கு உணவு
(8) விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு
(9) கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்
(10) அன்னதானத்திற்கு உதவுதல்
(11) கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
(12) கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13) கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14) இறைவனுக்கு பூ மாலை
(15) முன்னோர்கள் வழிபாடு
(16) மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17) ஏழை மாணவர்கள் படிக்க
(18) தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல், மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தால் கர்மாவை கழிக்கலாம்.
இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோபப் படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ளை, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தனதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்களாலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது நமது கர்மாக்களை கூட்டும். அனைத்து விதமான கர்மாக்களை ஆன்மநேய ஒருமைப்பாடு கொண்டு அதன் வீரியத்தை குறைத்து மேலும் பாவங்கள் செய்யாமல் பிறவி தொடரை முடித்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications