ஜஸ்ட் 5 ரூபாயை பீரோவில் இப்படி வைத்தால் என்னாகும் தெரியுமா? கடன் தீர்க்கும் ரூ.1 பரிகாரம்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிலுள்ள நிதி சிக்கல் தீர்ந்து, பணப்பிரச்சனை சீராக வேண்டுமானால், அதற்கு எளிய பரிகாரங்கள் பல ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன.. அதேபோல, எதிர்மறை எண்ணங்கள் அத்தனையும் விலகி, குடும்பத்தில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க வேண்டுமானால், இதற்கும் பரிகாரங்கள் கைகொடுக்கின்றன.. அந்தவகையில், 5 ரூபாய் மற்றும் 1 ரூபாய் நாணயத்தை வைத்து செய்யப்படும் பரிகாரங்கள் என்னென்ன? இந்த பரிகாரங்களை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வீட்டில் நிலவும் அளவுக்கதிகமாக பணக்கஷ்டமும், கடன் தொல்லையும் நீங்க வேண்டுமானால், 48 நாள் புணுகு, பச்சரிசி பரிகாரம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

Spirituality

1 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள்

1 ரூபாய் நாணயங்கள் 11 எடுத்துக்கொண்டு, அதில் புணுகு தடவி வேண்டும். பிறகு, மஞ்சள் அல்லது சிவப்பு நிற பருத்தி துணியில், புணுகு தடவிய நாணயங்கள், ஏலக்காய், ஜாதிக்காய் போட்டு, அனைத்தையும் முடிச்சாக கட்டி, ஒரு பாத்திரத்தில் வைத்துவிடவேண்டும்.

பின்னர், அந்த பாத்திரத்தின் மீது பச்சரிசியை கொட்டி மூடிவிட வேண்டும்... குடும்பத்தில் அதிக சம்பளம் பெறும் நபர்கள் தூங்கும் இடத்தில் இதனை வைத்து விட்டு, 48 நாட்களுக்கு தொடாமல் இருக்க வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு, பாத்திரத்திலுள்ள ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை தண்ணீரில் விட்டுவிட்டு, பச்சரிசியை எறும்புகளுக்கு உணவாக தந்துவிடலாம்.

வெள்ளிக்கிழமை, பெளர்ணமி வரும் நாட்கள் அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்கள், சதுர்த்தி நாட்களில், பிரம்மமுகூர்த்தத்தில் இந்த பரிகாரத்தை செய்து வரும்போது, பணக்கஷ்டம் நீங்கி, பணம் பெருக ஆரம்பிக்குமாம்.

கடன் தீர்க்கும் கண்ணாடி பாட்டில் பரிகாரம்

அதேபோல மற்றொரு பரிகாரமும் உள்ளது. இதற்கு ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில், பச்சரிசி அல்லது நெல்லை சிறிது போட வேண்டும். அதில், 1 ரூபாய் நாணயம் போட்டு, அதன்மீது சிறிது அரிசியை போட வேண்டும்.. பிறகு 2 ரூபாய் நாணயத்தை போட்டு, மீண்டும் சிறிது அரிசி போட வேண்டும்.. பின்னர் 5 ரூபாய் நாணயத்தை போட்டு, மீண்டும் சிறிது அரிசியை போட வேண்டும். பிறகு 10 ரூபாய் நாணயத்தையும் போட வேண்டும்.

கண்ணாடி பாட்டில் நிரம்பும்வரை அரிசி அல்லது நெல்லை போட்டு நிரப்ப வேண்டும். இறுதியாக பாட்டிலின் மூடியில் 6 துளைகளையிட்டு, வீட்டின் பீரோவுக்கு அருகில், பூஜையறை, அலுவலக அறை, வரவேற்பறை என ஏதாவதொரு இடத்தினை தேர்ந்தெடுத்து உங்கள் பார்வையில் படும்படி ஒரு மாதம் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும், பாட்டிலுள்ள அரிசியை பறவைகளுக்கு தீனியாக போட்டுவிட்டு, மீண்டும் இதே போல அரிசியையும், நாணயத்தையும் கொட்டி வைக்க வேண்டும்.. இதனால் லட்சுமி தேவியின் ஆசியும், அருளும் எளிதில் கிடைப்பதுடன், கடன் சிக்கலும் தீர்ந்து, பணமும் வீட்டிற்குள் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

பௌர்ணமி பரிகாரம்

அதேபோல, கடன் தொல்லை தீர்ந்து, பணவரவு தாராளமாக வரவேண்டுமானால்,பெளர்ணமி நாளன்று இரவு 8.00 மணிக்குமேல் அல்லது பிரம்மமுகூர்த்த நேரத்தில் பரிகாரம் ஒன்றை செய்யலாம்.

இதற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பிக் கொண்டு, 1 ரூபாய் நாணயங்கள் 3 அதற்குள் போட வேண்டும்.. பிறகு டம்ளரை உங்களது இடது கையில் வைத்து அதன் மேற்புறத்தில் வைத்து, பெளர்ணமி வெளிச்சம் படரும் இடத்தில் அமர்ந்து மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும்..

பிறகு, டம்ளரை இரவு முழுவதும் பெளர்ணமி வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டு மறுநாள் காலையில் , அதிலுள்ள நாணயங்களை பீரோ அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். டம்ளரிலுள்ள நீரிலிருந்து தினமும் ஒரு டீஸ்பூன் குடித்து வந்தால் கடன் பிரச்சனைகள் மெல்ல விலகுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+