கிருஷ்ண ஜெயந்தி+ கோகுலாஷ்டமி கொண்டாட உகந்த நேரம் எது? கிருஷ்ணன் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி எனப்படும் கோகுலாஷ்டமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், ஸ்ரீகிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து நைவேத்தியம் செய்ய உகந்த நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியே கோகுலாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. கண்ணனின் அவதார நட்சத்திரம் ரோகிணி. ஆவணி ரோகிணியும் அஷ்டமி திதியும் இணைந்த நாளில் கிருஷ்ணன் அவதாரம் செய்தார். இந்த ஆண்டு இன்றைய தினம் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

திங்கள்கிழமை காலை 9.12 மணி வரை சப்தமி திதி இருக்கிறது. அதன் பிறகுதான் கண்ணனுக்கு உகந்த அஷ்டமி திதி தொடங்குகிறது. இது அடுத்த நாள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 7.30 மணி வரை நீடிக்கிறது. பொதுவாக கிருஷ்ண ஜெயந்தியை மாலை வேளையில் கொண்டாடுவார்கள்.
ரோகிணி நட்சத்திரமானது இன்று இரவு 9.40 மணிக்கு பிறகு தொடங்கி நாளை இரவு 8.54 மணி வரை நீடிக்கிறது. எனவே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவோர் நாளையும் கொண்டாடலாம். கோகுலாஷ்டமி கொண்டாடுவோர் அஷ்டமி திதியிலும், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோர் ரோகிணி நட்சத்திரத்திலும் கொண்டாடுவார்கள்.
இன்றைய தினம் இரவு அஷ்டமியும் ரோகிணியும் சேர்ந்து வருவதால் இன்று இரவு 10 மணிக்கு மேல் கோகுலாஷ்டமி கொண்டாடுவது சிறப்பு. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரத்தை பார்த்துவிட்டோம்.
கிருஷ்ணஜெயந்தி+ கோகுலாஷ்டமியை கொண்டாடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டின் வாசலில் கோலம் இட்டு, அதில் கண்ணனின் சின்ன சின்ன பாதங்களை வரைய வேண்டும். பிறகு கிருஷ்ணனின் படம் அல்லது விக்ரகத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூ சூட வேண்டும்.

பிறகு கண்ணனின் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். குழந்தை இல்லாதவர்கள் ஆலிலை கிருஷ்ணனின் படத்தையோ விக்கிரகத்தையோ வைத்து வழிபடுவது சிறப்பு. மற்ற பண்டிகைகள் எல்லாம் விரதம் இருந்து கடைப்பிடிப்போம். ஆனால் கிருஷ்ண ஜெயந்திக்கு நிறைய பலகாரங்கள் செய்து படைக்க வேண்டும்.
மேலும் இவர்கள் ரோகிணியும் அஷ்டமியும் சேர்ந்து வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலையில் தங்கள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய 5 பொருட்களை வைத்து படைக்க வேண்டும். வெறும் பாலை காய்ச்சி அதில் சிறிது சர்க்கரை போட்டு வைத்தாலும் நல்லதுதான். அதுவும் இல்லாவிட்டால் கிருஷ்ணனின் படத்தின் வாயில் வெண்ணெய் தடவி விடலாம்.












Click it and Unblock the Notifications