கழுத்தை நெரிக்கும் கடனை விரட்டும் ஏகாக்ஷி நாரியல்.. வீட்டில் மகிழ்ச்சி, பணம் வர இந்த பொருள் போதுமே
சென்னை: எவ்வளவுதான் பாடுபட்டு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லையா? கடன் மேல் கடன் பெருகிக்கொண்டே கொண்டே போகிறதா? கழுத்தை நெரிக்கும் பணப்பிரச்சனைக்கு, எளிய பரிகாரங்கள் பல உள்ளன.. இதை நம்பிக்கையுடன் செய்யும்போது, பெருத்த பலனை பெற முடியும்.. அதேபோல சில முக்கிய பொருளை வீட்டில் வைத்திருப்பதால், கடனிலிருந்து மெல்ல விடுபடலாம். அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
கடன் பிரச்சனை குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டால், முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்துவிட வேண்டும்.. குல தெய்வ வழிபாடு என்பது கடன் தீர்க்க சிறந்த பரிகாரமாகும்.
பவுர்ணமி நாளில் குலதெய்வத்தின் படத்தை அலங்கரித்து அம்மனுக்கு இஷ்டமான படையல்களை படைத்து, பிறகு தூப, தீப, ஆரத்தி காண்பித்து கடன் தீர பிரார்த்தனை செய்யலாம். இதை வீட்டின் பூஜையறையிலேயே செய்யலாம். இப்படி 9 பௌர்ணமிகள் செய்து வரும்போது, கடன் தீருவதற்கான வழியை குல தெய்வம் காட்டும்...

பெருமாள் கோயில் - துளசி மாலை
அதேபோல, பெருமாள் கோவிலுக்கு சென்று சனி, புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் மனதில் உள்ள கோரிக்கையை வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.. இதனை 12 வாரம் செய்து வரும்போது கடன் தீருவதற்கான வழிகள் எளிதாக பிறக்கும்.
அதேபோல வீட்டில், வடக்கு திசையில் பழைய அல்லது பயனற்ற பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வடக்கு திசையில் கனமான நாற்காலிகள் அல்லது கனமான பொருட்கள் இருந்தால் உடனே எடுத்து விட வேண்டும். எப்போதுமே வடக்கு திசை சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டின் நுழைவு வாசலை அடைத்து இருக்கும்படி, வாகனங்கள் நிறுத்தக்கூடாது. செடிகள், மரங்களும் கூடாது.. வீட்டின் வாசல் சுத்தமாக, அடைப்பில்லாமல் இருந்தாலே, தங்குதடையின்றி பணம் வீட்டிற்குள் வரும்..
விநாயகர் யானை பொம்மை
அதேபோல, விநாயகரின் அம்சமான யானை பொம்மைகளை வீட்டின் வரவேற்பறையில் வைக்கலாம்.. ஆனால், ஜோடியாக உள்ள யானைகளைத்தான் வாங்கி வைக்க வேண்டும். இதனால் செய்வினை, திருஷ்டி, வாஸ்து பிரச்சினைகள் நீங்கி, தடைபட்ட பணவரவு சீராகும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வெள்ளி அல்லது பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட மீன் சிலையை, வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்.. உலோகத்தால் செய்யப்பட்ட மீனை வைத்திருக்க முடியாவிட்டால், ஒரு ஜோடி மீன்களின் ஓவியத்தையும் வீட்டில் வைக்கலாம் அல்லது மீன் தொட்டியையும் வைக்கலாம். இவையாவும் பாசிட்டிவ் சூழலை வீட்டிற்குள் ஏற்படுத்தும்.
ஒற்றைக்கண் தேங்காய்
ஏகாக்ஷி தேங்காய் எனப்படும் ஒற்றைக்கண் கொண்ட தேங்காயை வீட்டில் வைக்கலாம்.. இது அரிதான தேங்காய் என்றாலும், வீட்டில் இதனை வைப்பதன் மூலம் அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும், பணக்கஷ்டம் வரவே வராது என்பார்கள்.
நிதி நிலைமை சீராக இருக்க வேண்டுமானால், மகாலட்சுமியின் அருள் தேவை.. அந்தவகையில், வீட்டிற்கு வருவது போல பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதம் வைப்பதால், பணப்பற்றாக்குறை தீரும்.. வலம்புரி சங்கினையும் வீட்டில் வைத்திருக்கலாம். இதனால் நல்ல அதிர்வுகளும், நேர்மறை எண்ணங்கள் வீட்டில் அதிகரித்து, செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும். பசுவும் கன்றும் ஒன்றாக இருக்கும் காமதேனு சிலையை வரவேற்பு அறையில் வைக்கலாம்.. இதனால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications