Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவிதியை மாற்றும் கால பைரவர்..சனி தோஷம் நீங்க எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். நவகிரகங்களும், 12 ராசிகளும் கால பைரவரின் உடம்பில் அடக்கம் என்பதால் அவரை பக்தியுடன் வணங்கினால் எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கால பைரவரை விடாது வணங்கினால் தீய சக்திகள் அண்டாது. தலைவிதியை மாற்றும் கால பைரவரை எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். கால பைரவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சனீஸ்வரரின் குரு கால பைரவர். எனவேதான் பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் கால பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும்.

நினைத்ததை நிறைவேற்றும் கால பைரவர்

நினைத்ததை நிறைவேற்றும் கால பைரவர்

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த ஆண்டு இன்றைய தினம் காலபைரவாஷ்டமி கடைபிடிக்கப்படுகிறது. சிவ ஆலயங்களில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

பரணியில் அவதரித்த பைரவர்

பரணியில் அவதரித்த பைரவர்

சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

கால பைரவர்

கால பைரவர்

கால பைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

அபிஷேகப் பிரியர் பைரவர்

அபிஷேகப் பிரியர் பைரவர்

அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வெண் பூசணிக்காய் வெட்டி பலியிட்டு விளக்கேற்றலாம்.

பைரவருக்கு பிடித்த நைவேத்தியம்

பைரவருக்கு பிடித்த நைவேத்தியம்

பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதத்தை பைரவருக்கு படைக்கலாம். தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றலாம். எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள் ஆகும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். கால பைரவருக்கு சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி வணங்கினால் ஆயுள் ஹோமம் செய்த பலனைக் கொடுக்கும்.

எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்கலாம்

எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்கலாம்

பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. மேஷ ராசிக்காரர்கள் இவர் தலையினைப் பார்த்து வணங்க வேண்டும். இதன் மூலம் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கழுத்து பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் தோல் புஜம் பார்த்தும், கடக ராசிக்காரர்கள் மார்பு பகுதியை பார்த்து வணங்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் வயிறு பகுதியை பார்த்தும் வணங்கலாம்.

தோஷம் நீக்கும் பைரவர்

தோஷம் நீக்கும் பைரவர்

கன்னி ராசிக்காரர்கள் குறியை பார்த்தும், துலாம் ராசியில் பிறந்தவர்கள் பைரவரின் தொடை பகுதியை பார்த்தும் வணங்கலாம். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் முட்டி பகுதியை பார்த்து வணங்கலாம். தனுசு மற்றும் மகரம் ராசியில் பிறந்தவர்கள் முட்டியின் கீழ்பகுதி பார்த்து வணங்கலாம். கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

தலைவிதி மாறும்

தலைவிதி மாறும்

தலைவிதி மாறும் 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி வணங்குகின்றனர்.

திருமண தடைகள் நீங்கும்

திருமண தடைகள் நீங்கும்

6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+