முருகனுக்கு அரோகரா.. கந்தசஷ்டி விரதம் 4ம் நாள் நடக்கும் அற்புதம்.. நாலு பேருக்கு நன்மை செய்தால்? செம
சென்னை: கந்தசஷ்டி விரதத்தின் 4வது நாளான நாளைய தினம், முருகனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? 4ம் நாள் விரதத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்த பூஜையை செய்வதன் பலன்களும், நன்மைகளும் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்க்கலாம்.
கந்தசஷ்டி விரதத்தின் 3வது நாள் இன்று நவம்பர் 4ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் 3 தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றனர்..

பிரணவ மந்திரம்: ஷட்கோண கோலத்தின் மத்தியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச் சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் "சரவண பவ" என்று எழுதி, முதல் நாளில் "ச" என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் "ர" என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றிய நிலையில், இன்று 3வது நாளில் "வ" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர்..
காலை போலவே, இன்று மாலையும் தீபத்தை ஏற்றி வழிபட உள்ளனர். ஆனால், கோலமிடும்போது, ஏற்கனவே உள்ளதை துடைத்து சுத்தம் செய்து விட்டு, புதியதாக கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும். காலையில் பயன்படுத்திய பூக்களையும், நைவேத்தியங்களை மாலையில் பயன்படுத்தக் கூடாது.
விசேஷம்: கந்தசஷ்டி விழாவின் 4ம் நாள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வருகிறது.. செவ்வாய் என்றாலே முருகனுக்கேற்ற நாளாகும்.. அதிலும் கந்த சஷ்டியின்போது வரும் செவ்வாய்கிழமை என்றால் கூடுதல் விசேஷமானதாகும். நாளை 4வது நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள், 4 விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். நைவேத்தியமாக புதினா சாதம் செய்யலாம்.
சரவணபவ எழுத்துக்களில் "ண" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.. சிவப்பு நிறத்திலான பூக்கள் அல்ல செவ்வரளி பூக்களை கொண்டு வழிபடுவது சிறப்பு.
பசுமாடு: 4வது நாள் என்பதால், ஜீவராசிகளுக்கு உணவளிக்கலாம். இதனால் நம்முடைய கடன் பிரச்சனை குறையும் என்பது நம்பிக்கையாகும். அந்தவகையில், பசு மாட்டுக்கு பழம், கீரை, வெல்லம் கலந்த அரிசி இவைகளில் ஏதாவது ஒன்றை தானமாக வழங்க வேண்டும்... பிறகு நாய்க்கும்,காகத்திற்கும் உணவளிக்கலாம். புறா, கோழி போன்ற ஏதாவது ஒரு ஜீவராசிக்கும் உணவளிக்கலாம்.
மேற்கண்ட 4 ஜீவராசிகளுக்கும் உணவளிக்க முடியாமல் போனால், யாராவது 4 நபர்களுக்கு திருநீறு மற்றும் சுத்தமான நெய்யை தானமாக வழங்கலாம். அல்லது 4 பாக்கெட் விபூதியை, கோவிலுக்கு சென்று யாராவது 4 பேருக்கு வழங்கலாம். ஆனால், இந்த நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட்டுவிட்டு, மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் தானத்தை செய்து விட வேண்டும்.
தானங்கள்: "நாலு பேருக்காவது தானம் செய்யுங்க" என்று பெரியோர்கள் சொன்னது இதற்காகத்தான்.. இதனை கோவிலுக்கு வருபவர்களுக்கோ இவைகளை வேறு ஏதாவது கோவிலுக்கோ தானமாக கொடுக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications