இன்று காரடையான் நோன்பு! எமனிடம் போய் கணவரின் உயிரை மீட்ட சாவித்திரி! தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?
சென்னை: காரடையான் நோன்பு இன்று அனுசரிக்கப்படும் நிலையில் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்ள நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த நோன்பு யாருக்கு முக்கியமானது என்பதையும் பார்க்கலாம்.
மாசி மாதத்தில் வரும் நோன்புதான் இந்த காரடையான் நோன்பு. இந்த நோன்புக்கு கார அடைகளை செய்து படைக்க வேண்டும். உடன் சிறிது வெல்லம் அடைகளையும் செய்து படைக்க வேண்டும். திருமணமான பெண்கள் தங்களின் திருமாங்கல்யம் நிலைத்திருக்க வேண்டிய அம்பாளை நினைத்து இந்த நோன்பை நோற்கிறார்கள்.

அது போல் குடும்பம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கும் இந்த விரதம் முக்கியமானதாகும். இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்லலாம். இது மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் நாளில் கடைப்பிடிக்கப்படும். இந்த நோன்பை தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள பெண்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
சாவித்திரி, தனது கணவர் சத்தியவானை எமனிடம் சென்று மீட்டதாக வரலாறு உண்டு. இதற்காக சாவித்திரி மேற்கொண்ட இந்த விரதம்தான் பலனை அளித்தது. காட்டில் இருந்த சாவித்திரி தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக அம்பாளிடம் பிரார்த்தனை செய்து நோன்பு இருந்ததே காரடையான் நோன்பு என அழைக்கலாயிற்று.
இந்த விரத நாளன்று காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து கார அடை செய்து அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டாள் சாவித்திரி. அப்போது உருகாத வெண்ணெய்யையும் வைத்து வழிபட்டாராம். அந்த பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கார அடை, வெல்ல அடையுடன் வெண்ணெய் துண்டையும் வைத்து படைக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இன்றைய தினம் இந்த காரடையான் நோன்பு வருகிறது.
இந்த நாளில் திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக தாலி சரடை மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் கைகளில் மஞ்சள் நிற நோன்பு கயிறை கட்டிக் கொள்வார்கள். காரடையான் நோன்பு இன்று காலை சூரிய உதயத்தின் போது தொடங்கி சூரிய அஸ்தமனத்தின் போது முடியும்.
மார்ச் 14 ஆம் தேதி சூரிய உதயம் காலை 6.40-க்கு தொடங்கியது. அது போல் மாலை சூரிய அஸ்தமனம் 6.31 மணிக்கு மறைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் பூஜை செய்து வழிபடலாம். மேலும் மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக தாலி சரடை மாற்றலாம். நோன்பு கயிறையும் கட்டிக் கொள்ளலாம். 6 மணிக்கு மேல் தாலி சரடை மாற்றிக் கொள்ளக் கூடாது.
மேலும் சிலர் செவ்வாய், வெள்ளிகளில் தாலி சரடை மாற்றும் பழக்கம் இல்லாதவர்கள் நேற்றே சரடை மாற்றிக் கொண்டனர். இன்று அடைகளை செய்து நோன்பு கயிறுகளை மட்டும் 6 மணிக்குள்ளாக கட்டிக் கொள்வார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications