Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி கொடுத்த உத்தரவுபடியே நடந்த மிகப்பெரிய சம்பவங்கள்.. ஒரு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் கோயில் உத்தரவு பெட்டி கொடுத்த உத்தரவுபடியே நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயங்கள் அப்படியே மெய்சிலிர்க்கின்றன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாக பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.

spirtuality sivanmalai tiruvannamalai

பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும் வள்ளிமலைக்கு சென்று வள்ளியை மணம் முடித்த முருகன், வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த கோயிலில் தீர்வு கிடைக்கும். இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. இதில் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பூஜை பொருட்களை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இந்த பொருட்கள் எப்படி வைக்கப்படுகிறது என்றால் இங்கு என்ன வைக்க வேண்டும் என்பது பக்தர்களின் கனவில் வரும். அவர்கள் கோயில் நிர்வாகத்தை அணுகி குறிப்பிட்ட பொருளை பூஜையில் வைக்குமாறு சொல்வர். உடனே பூசாரி இவர்கள் சொல்வது உண்மைதானா, ஏற்கெனவே பெட்டியில் இருக்கும் பூஜை பொருளை மாற்றலாமா என பூ போட்டு கேட்பார்கள். அதில் வெள்ளை பூ வந்தால் மாற்றலாம். சிகப்பு பூ வந்தால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

இப்படி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் வைத்து வழிபட்டால் மஞ்சளின் விலை கிலோ ரூ 18 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் பஞ்சு வைத்து பூஜை செய்ய சொன்ன போது நாட்டில் ஜவுளித் தொழில் விருத்தியடைந்தது.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட பொருட்களால் நடந்த தாக்கங்கள் குறித்து பார்க்கலாம். அதில் ஒரு முறை துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜை செய்யப்பட்ட போது கார்கில் போர் மூண்டது. ஒரு முறை மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது நிலத்தின் விலை பன்மடங்கு உயர்ந்தது.

அது போல் 2004 ஆம் ஆண்டு தண்ணீர் வைத்து பூஜை செய்ய சொன்ன போது சுனாமி பேரழிவு வந்து நிறைய பேர் உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். அது போல் கடந்த 2017ஆம் ஆண்டு இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்த போது சசிகலா , சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.

அது போல் தங்கத்தை வைத்து பூஜை செய்த போது தங்கம் விலை உயர்ந்தது. அது போல் 2019 ஆம் ஆண்டு மஞ்சள் வைத்து பூஜை செய்ய சொன்ன போது கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்படி நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் அண்மையில் அகல் விளக்கு வைத்து பூஜை செய்த போது திருவண்ணாமலையில் நிலச்சரிவ ஏற்பட்டதாக பக்தர்கள் கவலைக் கொள்கிறார்கள். எனவே ஒவ்வொரு விஷயமும் ஆண்டவன் போட்ட உத்தரவால் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+