வாராரு... வாராரு.. அழகர் வாராரு.. மதுரை சித்திரைத் திருவிழா- நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை: தமிழ்நாட்டில் முதன்மையான ஆன்மீகப் பெருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 8-ந் தேதி நடைபெறும்; இதனைத் தொடர்ந்து மே 11-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி ஒன்று திரளும் ஒற்றைத் திருவிழாவாக போற்றப்படுவது மதுரை சித்திரைத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவுக்காக தென் தமிழ்நாட்டுப் பக்தர்கள் தவமாய் தவமிருந்து காத்திருப்பது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரையின் மாசி வீதிகளில் சித்திரை திருவிழா காலத்தில் அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பல வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்
மே 6-ந் தேதி: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மே 7-ந் தேதி: சுந்தரேஸ்வரரும் அம்மனும் போரிடும் திக்கு விஜயம் நிகழ்ச்சி
மே 8-ந் தேதி: மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம்; மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வில் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்து தெய்வானை, முருகப் பெருமான், பெருமாள் பங்கேற்பர்.
மே 9-ந் தேதி: மதுரையம்பதியின் மாசி வீசிதிகள் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 10-ந் தேதி: மதுரை அழகர்மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகர் பெருமாள் மதுரையை நோக்கி புறப்படுதல். அழகர்மலையில் இருந்து மதுரை மாநகர் நோக்கி பரிவாரங்கள் புடைசூழ வருகை தரும் கள்ளழகர் பெருமான், நூற்றுக்கணக்கான மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
மே 11-ந் தேதி: மாவடியில் கள்ளழகர் பெருமாளை அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி.
மே 12-ந் தேதி: சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக, தங்கக் குதிரையில் வீற்ற நிலையில் கள்ளழகர் பெருமாள், கரைபுரண்டோடும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
மே 13-ந் தேதி: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி
மே 15-ந் தேதி: மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி கள்ளழகர் புறப்படுதல்.
மே 17-ந் தேதி: மதுரை சித்திரைத் திருவிழா நிறைவடையும்
ஏற்பாடுகள் மும்முரம்
இதனிடையே மதுரை சித்திரைத் திருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. அரவிந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வைகை ஆற்றில் நீர் திறப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா, கடந்த ஆண்டுகளை விட மிகவும் சிறப்பாக நடத்தப்படும். இதுவரையிலான கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சித்திரைத் திருவிழாவுக்காக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications