Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகர விளக்கு பூஜை..மகரஜோதிக்கு தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மகரஜோதி தரிசனம் முடிந்து விட்டு மலையிலிருந்து கீழிறங்கும் பக்தர்கள் மற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இறங்க வேண்டுமெனவும், பிற பக்தர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.310 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது.

Makara Vilakku Pooja today in Sabarimalai Devasamboard appeal to devotees darshan of Makara Jyothi

இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இன்று சபரிமலை வந்தடைகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இதன் பூஜைகள் நடக்கிறது.

இன்று மாலை 6.20 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பல பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். மகர ஜோதி தரிசனம் கிடைத்த உடன் பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் எழுப்பும் சரணகோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும்.

அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றைய தினம் இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.310 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+