திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 15: தோழிகளிடையே செல்ல சண்டை ஆண்டாள் காலத்திலேயே இருந்திருக்கு!
திருப்பாவை - பாடல் 15
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: ஏலே என் தோழியே இளமைக் கிளியே! நாங்கள் எல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என தோழிகள் எல்லாம் கடிந்து கொண்டு அழைத்தனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள், இப்போதே வந்துவிடுகிறேன் என்றாளாம். அப்போது தோழிகள், "நீ இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு கோபப்படாதே என சொல்வது ரொம்ப நல்லாயிருக்கு" என கூறி மீண்டும் கடுகடுத்தனர். அதற்கு அந்த தோழி, சரி ஆளை விடுங்க, நான் ஏமாற்றுக்காரிதான், நீங்கள் எல்லாம் பேச்சில் திறமைசாலிகள்தான் என்கிறாள். அதற்கு அந்த தோழிகள், நாங்கள் எல்லாம் எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டுமா, அப்படியென்ன எங்களிடம் இல்லாத ஒரு சிறப்பு உன்னிடம் இருக்கிறது என மீண்டும் கோபப்படுகிறார்கள். இப்படியே இரு தரப்பும் மாற்றி மாற்றி கோபப்படுகிறாார்கள். அந்த தோழி, நான் மட்டும்தான் தூங்குவது போல் சொல்கிறீர்களே எல்லாரும் வந்துவிட்டார்களா என்ன என கேட்க , அதற்கு அந்த தோழிகள் , வெளியே வந்து பாருடி, சும்மா பேசிக் கொண்டிருக்காதே, எல்லாரும் வந்து மாயக்கண்ணனை பாடி மகிழ்கிறார்கள்.
விளக்கம்: பெண்களுக்குள் நகைச்சுவையாக கலாய்க்கும் விதத்தில் ஆண்டாள் பாடியிருக்கிறாள்.
திருவெம்பாவை பாடல் - 15
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்ணே! நம் தோழி, எம்பெருமானே என சிவனை அழைப்பாள். அவரது சிறப்புகளை பேசுவாள். அப்போது கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வரும். அந்த பக்தி பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டாள். அப்படிப்பட்ட சிவனை பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைய குளத்தில் நீராடுவோம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications