அமெரிக்காவில் நவராத்திரி கொலு! தத்ரூபமாக வைக்கப்பட்ட தசாவதாரம்! ஓங்கி ஒலித்த மகிஷாசுரமர்த்தினி
கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தமிழரான ராஜி கோவிந்தராஜன் வீட்டில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா, கொலுவுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றினர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முடிந்தவுடன் நவராத்திரி தொடங்கும். இந்த 9 நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 தெய்வங்களை போற்றும் வகையில் தலா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க 9 நாட்கள் கொலு வைத்து போரிட்டு 10 ஆம் நாள் வென்றார். அது முதல் மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்பட்டாள்.

கொலு வைத்து இறைவனை வழிபட்டால் வாழ்வில் எல்லா காரியங்களிலும் ஜெயம்தான் என்பதற்காகவே மக்கள் அவரவர் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவர். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9, 11 என நம் வசதிக்கேற்ப கொலு படிகளில் சுவாமி சிலைகளை வைத்து அலங்கரிக்கப்படும். அது போல் புது புது விஷயங்களை கருப்பொருளாக வைத்து பள்ளிக் கூடம், தேசிய ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்டவை உணர்த்தும் வகையில் பொம்மைகள் அலங்கரிக்கப்படும்.

இந்த கொலு பொம்மைகளின் வாயிலாக மரங்களை நடுவோம், காடுகளை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை காப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் உள்ளிட்ட கருத்தை சொல்லும் விதத்தில் கருப்பொருள்களும் இருக்கும். காலம் காலமாக கொலு வைத்து வருபவர்கள் புரட்டாசி மாத அமாவாசை அன்று வைப்பர். சரஸ்வதி பூஜை அன்று முடிவுறும். இந்த இடைபட்ட நாட்களில் தினந்தோறும் சுவாமிக்கு நெய்வேத்யம் செய்யப்படும்.

பெண்கள், கன்னியா குழந்தைகள், வயது வந்த சிறுமிகள் உள்ளிட்டோரை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுக்கப்படும். சுவாமியின் பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லப்படும். இந்த பழக்கத்தை வெளிநாடு சென்றாலும் இன்னும் மறக்காமல் பலர் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் ஒன் இந்தியா வாசகரான அமெரிக்காவை சேர்ந்த ராஜி கோவிந்தராஜன், மன்டேக்காவில் உள்ள தனது வீட்டில் ஆண்டுதோறும் தவறாமல் நவராத்திரியை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 7 படிகள் வைத்து அவற்றில் பரமனின் 10 அவதாரங்களை குறிக்கும் தசாவதாரங்களை வைத்திருந்தார். மேலும் 8 விதமான லட்சுமிகளும் ராஜியின் வீட்டிற்கு கொலு பொம்மைகள் உருவில் ஆசி வழங்க வந்திருந்தனர்.

அது போல் துர்கா, லட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு ஆகியோரின் பல்வேறு விதமான பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நவராத்திரி பூஜையின் போது ஐகிரி நந்தினி, லட்சுமி அஸ்டகம், கந்த சஷ்டி கவசம் ஆகியவை பாடப்பட்டது. மேலும் கர்நாடக வாய்ப்பாட்டுகள், பஜனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இந்த கொலுவை காண 100-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் வீணையும் வாசிக்கப்பட்டது. அறுசுவை உணவு சமைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டது. இறுதியாக பெண்களுக்கு வெற்றிலை பாக்கு , பூ, பழம், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட சுபமான பொருட்கள் தாம்பூலமாக வழங்கப்பட்டன. பின்னர் மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications