பழனி கோவிலில் நடந்த அதிசயம்.. 12 நாளில் குவிந்த தங்கம்! எல்லாம் முருகன் அருள்.. சிலிர்த்த பக்தர்கள்!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் கடந்த சில தினங்களாகவே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 94 லட்சத்து 872 ரூபாய் கிடைத்திருக்கிறது. மேலும், 571 கிராம் தங்கமும், 11,856 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் பக்தர்கள்.
தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார்.
அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக தைப்பூசம் பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள். இதேபோல பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. மேலும், முகூர்த்தங்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர் அவ்வாறு மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, சேவல், தானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள்.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் அவற்றை திறந்து எண்ணுவது வழக்கம். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் உண்டியல்கள் நிரம்பியது. இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 94 லட்சத்து 872 ரூபாய் கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அந்த வகையில், தங்கம் 907 கிராமும், வெள்ளி 25,509 கிராமும் கிடைத்தது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள் 645ம் கிடைத்தன. மேலும் பக்தர்கள் தங்கம், வெள்ளியிலான வேல், தாலிச் செயின், தங்கக் காசு, சாமி சிலைகள், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவ தானியங்கள், பட்டாடைகள், சேவல்களையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications