உங்க வீட்டில் இந்த ஒரு பொருள் இருக்கா..லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும்..குபேரன் அருள் கிடைக்கும்!
சென்னை: பண வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். தடையின்றி வருமானம் வர என்னென்ன செய்ய வேண்டும் என்றும் யோசிக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் பணம் வருவதில் தடை ஏற்படும். கொடுத்த கடன் கூட திரும்ப வராமல் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும். அன்னை மகாலட்சுமியின் அருள்பார்வை கிடைத்தால் போதும் பணம் தடையின்றி ஏதாவது ஒரு வகையில் நம்மை தேடி வரும். குபேரன் அருள் கிடைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
பணக்காரர்களாக இருப்பவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். மாத சம்பளம் வாங்குபவர்களோ வேறு ஏதாவது ஒரு வகையில் கூடுதல் வருமானம் கிடைக்குமா என்று யோசிப்பார்கள். பணத்தின் மீதான ஆசை பலருக்குமே இருக்கும். ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும்.
குபேரன் ஒருவரது வீட்டை மட்டும் குத்தகைக்கு எடுத்து குடியேறி விட்டது போல பல வழிகளில் இருந்தும் பணம் வரும்.
நமக்கு மட்டும் ஏன் கையில் வரும் வரும் நான்கு நாட்களுக்குக் கூட தங்கமாட்டேன் என்கிறது என்று பலரும் யோசிப்பார்கள். கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்வது போல உங்களுக்கு பணம் தாராளமாக வர சில பரிகாரங்களை செய்யுங்கள். இது சாதாரணமான பரிகாரம்தான் பெரிய அளவில் செலவு வராது உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களே உங்களுக்கு நிறைய வருமானத்தை வரவழைக்கும். லட்சுமி கடாட்சம் வீடு தேடி வர என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

தண்ணீர் கொடுங்கள்
நம்முடைய வீட்டிற்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பாடு. அதுவும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை நாட்களில் நம் வீடு தேடி வரும் சுமங்கலி பெண்களுக்கு தண்ணீர் கொடுங்கள். அவர்கள் வீட்டில் இருந்து திரும்பி செல்லும் போது மஞ்சள், குங்குமம் கொடுத்து அனுப்புங்கள். மனம் குளிர மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளை மொச்சையை வேக வைத்து அதை சுண்டலாக செய்து மகாலட்சுமிக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் நம்முடைய குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட வேண்டும். பொதுவாகவே ஊறுகாய் பலரது வீடுகளில் இருக்கும். குபேர பகவானுக்கு ஊறுகாய் பிடித்தமானது. எனவே குபேரன் மனம் குளிரும் வகையில் பலவித ஊறுகாய்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

டயமண்ட் கல்கண்டு
டயமண்ட் கல்கண்டு சுக்கிரனுக்கு பிடித்தமானது. நாம் வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றும் போது அதில் சில டயமண்ட் கல்கண்டு போட்டு விளக்கேற்றவும். லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும். திருநங்கைகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் கையினால் ஆசி பெற்று சில்லறை வாங்கவும் அதை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து பயன்படுத்தவும். பணம் அள்ள அள்ள குறையாது வரும்.

பண வரவு தரும் பசு
பசு மகாலட்சுமியின் அம்சம். பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்க செல்வம் குறைவின்றி அதிகரிக்கும். அதே போல தயிர் பூசி குளித்தாலும் அள்ள அள்ள குறையாது பண வரவு வரும். அதே போல பாசி பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அதை பசுவிற்கு தர பணம் வரவு தாராளமாக இருக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வில்வ மரத்திற்கு பசும்பால் ஊற்றி வர நிச்சயம் நல்ல வழியில் பணம் வரும்.

ஏழுமலையான் அருள்
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்று சொல்வார்கள். தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமை நாளில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும். நம்முடைய வீட்டில் விஷ்ணு சகஸ்ரா நாமம், வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். ஐப்பசி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். ஐப்பசி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

பவுர்ணமி பூஜை
பவுர்ணமி வழிபாடு செல்வ வளத்தை அதிகரிக்கும். 11 பவுர்ணமி நாளில் சொர்ணாகர்ஷன பைரவரை பூஜை செய்து வழிபட பணம் குவியும். வெள்ளிக்கிழமை மாலை வேலையில் விளக்கேற்றி மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோஸ்திரம் கூறி வணங்க செல்வம் பெருகும்.

ஆந்தை வழிபாடு
தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை. வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லக்ஷ்மியை அதிகளவு வழிபாடு செய்கின்றனர். ஆந்தை படத்தை அதிகம் பார்த்து வர தன வரவு அதிகரிக்கும். சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து வைத்து அதனை அன்னதானத்திற்கு செலவிட வேண்டும். அது போல பல மடங்கு செல்வம் சேரும்.

குல தெய்வ வழிபாடு
குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும். நாம் கூறியிருக்கும் பரிகாரம் எல்லாமே எளிமையானதுதான். இதில் உங்களால் செய்ய முடிந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications