புறாக்கள் வீட்டில் கூடு கட்டுவது நல்லதா? கடன் தொல்லை அதிகமா? 3 புறா இறகு போதுமே.. செம வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீடுகளுக்குள் பறவைகள் வருவதை வைத்துக்கூட சகுனங்கள் சொல்லப்படுகின்றன.. எந்தெந்த பறவைகள் வீடுகளுக்குள் வரலாம்? கூடு கட்டலாம்? என்பது குறித்தும் ஆன்மீகத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.. அந்தவகையில், புறாக்கள் வீடுகளுக்குள் வருவது நல்ல விஷயதமா? நன்மை தருமா? பணம் வரவு இருக்குமா? ஒரு புறாவின் இறகு ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டது என்கிறார்களே உண்மையா?? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கரையான் கூடு, குளவி கூடு போன்ற பூச்சிகள் கட்டும் கூடுகள், வீடுகளில் இருப்பது மிகவும் ஆபத்தானவை என்று சொல்வார்கள்.. கரையான் கூடுகள் மிகவும் தொல்லை தருபவையும்கூட.

இதனால் குடும்பத்தில் வீண் விரயங்களும், நிம்மதியின்மையும் சேர்ந்துவிடும்.. அதனால், கரையான்கூடு இருந்தால் மட்டும் அதனை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.. அத்துடன் மட்டுமல்லாமல், அந்த இடத்தில், சிறிது சிமெண்ட் வைத்து பூசி விட்டால் போதும்.. அங்கு மீண்டும் மீண்டும் கரையான் படையெடுத்து வராமல் தடுக்கப்பட்டுவிடும்.
அதிர்ஷ்டம் அடிக்கும்
பொதுவாக, வீட்டிற்குள் பறவைகளின் வருகை வாழ்க்கையின் அதிர்ஷ்டம் அதிகரிக்கப்போவதையே குறிக்கிறது... ஆனால், அது எந்தவிதமான பறவை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது,.
மஹாலக்ஷ்மியின் வாகனமான ஆந்தைகள் வீட்டிற்குள் வந்தால், வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பதுபோல, மகாவிஷ்ணுவின் வாகனமான கழுகுகள், வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்பதுபோல,
சமாதான பறவையான புறாக்கள் நம்முடைய வீடுகளுக்குள் வந்தால், குடும்பத்திலுள்ள கஷ்டங்கள் நீங்கிவிடும் என்பார்கள்..
தாயார் மகாலட்சுமி
தாயார் மகாலட்சுமிக்கு உகந்த பறவையாகும்.. எனவே, புறாக்கள் வீட்டிற்கு வருவதால், அது துரதிர்ஷ்டத்தையும் அதிர்ஷ்டமாக மாற்றிவிடக்கூடிய அளவுக்கு சக்தி படைத்தது என்கிறார்கள்.. வீடு தேடி வந்த செல்வத்தை புறக்கணிப்பதை போன்றது.
புறாவை எடுத்துக் கொண்டால், மங்களம் மற்றும் அமைதியின் சின்னமாக போற்றப்படுகிறது..
எந்த வீட்டில் புறாக்கள் வசிக்கின்றனவோ, அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் ஒற்றுமையும் தங்கியிருக்கும் என்பது நம்பிக்கையாகும்..புறாக்கள் வீட்டிற்குள் வந்தாலும் அதனை துரத்திவிடக்கூடாது.. அப்படி செய்தால், மகாலட்சுமியை அவமதிப்பதாக அமையும்.
புறா வந்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் வரப் போகிறது என்று அர்த்தம். அதனால்தான் புறாவை கடவுளின் தூதர் என்று சொல்கிறார்கள்.
ராகு கிரக தோஷம்
எப்போதுமே புறாவிற்கு முற்றத்தில் உணவளித்து வந்தால், ராகு கிரக தோஷம் நீங்குமாம்.. எக்காரணம் கொண்டும் கூரைகளில் உணவு வைக்கக்கூடாது.. முற்றத்தில் உணவளிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. ஒருவேளை புறாக்களின் எச்சங்கள் சுத்தம் செய்யப்படாவிட்டால், அது குடும்பத்தில் நெகட்டிவ் எனர்ஜியை தந்துவிடும்.. ராகு கிரகத்தின் எதிர்மறையான விளைவுகளை செயல்படுத்தலாம் என்பதால், உடனடியாக எச்சங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
புறா கூடு கட்டினால் அதை கலைத்துவிட கூடாது என்பார்கள்.. புறா கூடு இருப்பது செல்வத்தையும் அதிகரிக்க செய்யுமாம். ஆனால், வலுக்கட்டாயமாக தேடி வந்து கூடு கட்டினால் அது சாதகமான சூழலை ஏற்படுத்தாது என்கிறார்கள்... , வீட்டின் ஜன்னல் அல்லது பால்கனியில் புறா கூடு இருந்தாலும், அது அமங்கலமாக கருதப்படுகிறது.. புறாவின் கூடு அழுக்காக இருந்தாலும் நல்லதல்ல என்கிறார்கள்
தலைக்கு மேல் புறா
தலைக்கு மேல் புறா பறப்பது நன்மை காரியம் நடப்பதற்கான அறிகுறியாகும்.. உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகளிலிருந்து விடுபட போகிறீர்கள் அர்த்தம். அதேபோல நீங்கள் வெளியே சென்று கொண்டிருக்கும்போது, உங்களது வலது பக்கத்திலிருந்து புறா பறந்தால், குடும்பத்திலுள்ளவர்களுக்கு துரதிர்ஷ்டமாகும்..
அதேபோல புறா இறகு வைத்திருப்பதும் நன்மையே தரும் என்கிறார்கள்.. வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக இருந்தால், புறாவின் இறகுகளை எடுத்து, வெள்ளை துணியில் வைத்து, சிவப்பு நிற நூலால் 7 முறை சுற்றி, வீட்டில் உள்ள பணப் பெட்டியில் வைத்துவிட்டால் போதும்.. லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைப்பதுடன் பண பிரச்சனை நீங்குவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலைத்திருக்கும்.
கடன் பிரச்சனை
அதேபோல கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட, 3 புறா இறகுகளை எடுத்து, வீட்டின் மூலைகளில் வைக்க வேண்டும். அதாவது ஒரு இறகை வீட்டின் தெற்கு மூலையிலும், அடுத்த இறகை கிச்சனில் வடக்கு மூலையிலும், 3வது இறகை மேற்கு திசையை நோக்கியவாறும் வைத்துவிட வேண்டும். இதனால் லட்சுமி தேவியின் ஆசி கிடைப்பதுடன், கடன் தொல்லையும் மெல்ல குறைந்துவிடும்.
உங்களது காரியம் வெற்றி பெற வேண்டுமானால் வியாழக்கிழமைகளில், ஒரு மஞ்சள் துணியில் புறாவின் இறகுகளை வைத்து, மஞ்சள் நூலால் கட்டி, வீட்டின் பணப்பெட்டியில் வைக்கலாம். இதனால் காரிய வெற்றி பெறும்..
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications