Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவோம் ஐயப்பன் யாத்திரை 3:சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் கவனிக்க வேண்டியது என்ன? 20 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஐதீகம், குருசாமிகள் எனப்படும் குருமார்களின் ஆலோசனைகள் என்ன என்பதை கடந்த 2 பகுதிகளில் பார்த்தோம். இந்த 3-ம் பகுதியில் பெண்கள், பெண் ஐயப்ப பக்தர்கள், உடைகள் தொடர்பான சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்.

1) வீட்டில் மகள் வயதுக்கு வந்துவிட்டால் தீட்டு என்பது பொதுவாக கருதப்படும். ஆனால் மகள் வயதுக்ககு வருவதும் சுப நிகழ்வே. அதனால் உடனே மாலையை கழற்ற வேண்டியதும் இல்லை. புண்ணியதான நிகழ்வு முடிந்த பின்னர் மகளை மாலை போட்டபடியே பார்க்கலாம் என்கிறது ஐதீகம்.

spirtuality sabarimala

2) வீட்டில் மகள் வயதுக்கு வராத நிலையில் 12 வயதுள்ளவராக இருந்தாலும் கூட உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாம் நடக்க வேண்டும். அதாவது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

3) பணியிடங்களுக்கு செல்கிற பக்தர்கள் கறுப்பு வேட்டி அணிந்து செல்ல வேண்டும். அப்படி சென்றால், வீட்டு விலக்கான பெண்கள், ஐயப்ப பக்தர்கள் கண்ணில் படாமல் ஒதுங்கி இருக்க உதவும்.

4) 3 நாட்கள் அல்லது 1 வாரம் மட்டுமே விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லலாம் என திட்டமிடுவதைத் தவிர்த்து குறைந்தபட்சம் 41 நாட்கள் விரதம் இருந்து மலையேறுவதுதான் மிகவும் சரியான நடைமுறையாகும்.

5) காலணிகள் பொதுவாக யாத்திரையின் போது அணியக் கூடாதுதான். விதிவிலக்காக சிலரது உடல்நலனைப் பொறுத்து புதிய காலணிகளை அணிந்து மலையேறுகின்றனர். குறிப்பாக சர்க்கரை பாதிப்பு அதிகம் இருந்தால் மிதியடி அணியலாம் என்கின்றனர் குருமார்கள்.

6) 18 படிகளேறி ஐயனை தரிசனம் செய்வது சில வினாடிகள்தான். இதுதான் ஐயப்பனை வழிபடுகிற முறையும். நீண்ட நேரம் தரிசனம் செய்தல், மீண்டும் மீண்டும் தரிசனம் செய்தல் என்பது தேவையும் அற்றது.

7) ஐயப்ப பக்தர்கள் உற்சாக மிகுதியில் ஆவேசமாக சரண கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் அருளாளன் ஐயப்பனுக்கோ அமைதியும் தூய்மையுமே தேவை. அதைத்தான் ஐயன் விரும்புவார்.

8) இருமுடியைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்; மற்றொருவர் பயன்படுத்தி இருந்தாலும் தூய்மையான நிலையில் சிதிலம் அடையாமல் இருந்தால் பயன்படுத்தலாம்

9) அத்தனை ஐயப்ப பக்தர்களையும் அழைத்துதான் வீட்டிலேயே கன்னிபூஜை செய்தாக வேண்டும் என்பதும் இல்லை. வீட்டில் உணவு தயாரித்து வறியோருக்கு வாரி கொடுத்தாலே ஐயன் ஏற்றுக் கொள்வார்.

10) மாலை அணிந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரலாம்; ஆனால் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் குளிக்க வேண்டும்

11) விரத காலங்களில் சொகுசு உடைகளை தவிர்த்து ஐயப்ப அடியாருக்கே உரிய வேட்டி அணிதலே சரியானதுமாகும்.

12) ஐயப்ப பக்தராக மாலை அணிவித்திருந்தாலும் பணியிடப் பாதுகாப்புகாக ஷூ போன்றவற்றை அணியலாம். ஐயன் அமைதி கொள்வார்.

13) மாலை அணிந்த காலத்தில் வீட்டில் அம்மை போட்டிருந்தால் மாலையை கழற்றியாக வேண்டும்; வெளியூரில் தங்கி இருந்தால் அப்படி செய்ய வேண்டியதும் இல்லை.

14) இருமுடி கட்டும் போது போட்டோ, வீடியோக்கள் எடுக்காமல் இருக்க வேண்டும்.

15) விஷேசங்களுக்கு செல்லும் பெண் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்குரிய கறுப்பு உடையையே அணியலாம்; பட்டு உடைகளைத் தவிர்க்கலாம். ஏனெனில் வீட்டுக்கு விலக்கான பெண்கள் உங்கள் கண்களில் படாமல் ஒதுங்கி நிற்க வகை செய்யும்.

16) சுடிதார் அணிய விரும்பினால் கறுப்பு நிறத்தில் உடை அணியலாம்.

17) 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாலை அணிந்திருந்தால் உடல்நலனைப் பொறுத்து இருவேளை குளிக்கலாம் அல்லது ஒரு வேளை மட்டுமே குளிக்கலாம்

18) கர்ப்பப்பை எடுத்துவிட்ட சான்றிதழ் வைத்திருந்தாலும் சபரிமலைக்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே காவல்துறை அனுமதிக்கும் என்பதால் உரிய வயது காலம் வரை பொறுத்திருந்து யாத்திரை செல்லலாம்

19) பொதுவாக 41 நாட்கள் விரத காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும்

20) சபரிமலை யாத்திரை என்பது தவக் காலம். இருமுடி கட்டிப் பயணிக்கும் போது திரும்பிப் பார்க்காமல் போய்விட்டு வருகிறேன் என சொல்லாமல் வேள்வியைப் போல பயணிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+