வெண்கல தட்டு சத்தம்.. செம்பு நீர்.. கடன் தொல்லை தீர இந்த பரிகாரம் செய்தாலே போதும்.. சிம்பிள் டிப்ஸ்
சென்னை: உழைத்து சம்பாதித்த பணம் கையில் தங்காமல் போவதுண்டு.. இதனால் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லைக்கும் ஆளாக நேரிடுகிறது.. இந்த கடன் தொல்லையை தீர்ப்பதற்கும் எந்த வழியும் கிடைப்பதில்லை.. அல்லது அந்த கடனை எளிதாக அடைக்கவும் முடிவதில்லை.. எனவே, குடும்பத்திலுள்ள நிதி நிலைமை சீராக, எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
வீட்டிலுள்ள திருஷ்டி கழிந்தாலே, அல்லது வீட்டிலுள்ள நபர்கள் மீதான திருஷ்டி கழிந்தாலே, தடையின்றி நன்மைகள் வந்து சேரும் என்பார்கள்.

இதற்காகத்தான், ஒரு சிவப்பு துணியில், சிறிது கல் உப்பை முடிச்சு போல கட்டி வாசலில் தொங்கவிட அறிவுறுத்துகிறார்கள்.
வெண்கல தட்டு
வீட்டு பூஜையறையில் வெண்கல தட்டினை வைத்து, அதில் குபேரன் படம் அல்லது குபேரன் சிலையை வைக்க வேண்டும். இதே தட்டில் சில்லறை நாணயங்களையும் போட வேண்டும்.. பிறகு, குபேர காலத்தில் தாமரை திரையில் நெய் விளக்கேற்றி குபேரனை வழிபட வேண்டும்.
இறுதியாக, தட்டிலுள்ள சில்லறை நாணயங்களை 2 கைகளாலும் அள்ளி, எடுத்து, மீண்டும் தட்டிலேயே, சத்தம் வரும்படி போட வேண்டும். காரணம், நாணய சத்த ஒலி குபேரனுக்கு பிடிக்குமாம்.. இதனாலும் வீட்டில் நிதி நிலைமை சீராகும் என்பார்கள்.
மாத சம்பளம் பரிகாரம்
அதேபோல ஒருவர் மாத சம்பளம் வாங்கியதும், அல்லது வியாபாரத்தில் கிடைத்த முதல் லாபத்திலிருந்து வெறும் ரூ.500 நோட்டை மட்டும் எடுத்து, ஒரு கிண்ணத்தில் போட வேண்டும். இந்த 500 ரூபாயுடன் 1 மற்றும் 5 ரூபாய் நாணயம் என இரண்டையுமே போட வேண்டும்.
இந்த சில்லறைகளுடன் 2 ஏலக்காய், துண்டு பட்டை, 2 அண்ணாச்சி மொக்கு, கிராம்பு 3, குண்டு மஞ்சள் போன்ற மசாலா பொருட்களையும் போட வேண்டும். கிண்ணத்தில் உள்ள ரூபாய் நோட்டின் மீது அனைத்து சில்லறை, வாசனை பொருட்களும் பரப்பி இருக்க வேண்டும்.. ஏனென்றால், இந்த வாசனை பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.
இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலை அல்லது குபேரன் வாசம் செய்யும் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இதற்கு தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும். இதனால் நிதி நிலைமை சீராகி, கடன் பிரச்சனை தீரும்.
வெள்ளை சூடம்
செவ்வாய், வெள்ளியில் இரவு தூங்குவதற்கு முன்பு, 3 வெள்ளை சூடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றி வீட்டின் முற்றத்தில் வைத்து ஏற்றினாலும், திருஷ்டி கழிந்துவிடும்.
அதுபோலவே 3 கற்பூரம் 5 கிராம்பு எடுத்து, நெருப்பிலிட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இதனை செய்தாலும் நிதி நிலைமை சீராகும்.
ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்டினாலும், திருஷ்டி விலகி, நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும். செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்களிலும் சிறிது மஞ்சள் , செம்பு நீரில் கரைத்து, இந்த தண்ணீரை வீட்டை சுற்றி தெளித்து விடுவதால், கண்திருஷ்டி நீங்குவதுடன். செல்வத்தையும் ஈர்த்து கொண்டு வந்துவிடுமாம்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications