நெற்றியில் இந்த ஒரு பொருளை பொட்டாக வைத்தால் போதும்..கவலைகள் பறந்தோடும்..நேர்மறை சக்தி அதிகரிக்கும்!
சென்னை: புது வேலைக்கு இன்டர்வியூக்கு செல்பவர்கள் இந்த ஒரு பொருளை தேய்த்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டு சென்றால் அது வெற்றிகரமாக முடியும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று ஆன்மீக பரிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன அற்புதமான பொருள் என்று கேட்கிறீர்களா? ஆன்மீக பரிகாரங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பொருள் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. அது காரியங்களில் வெற்றியை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த ஒரு பொருள் நம்முடைய வீட்டில் இருந்தால் சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
மஞ்சள் எல்லோருக்கும் தெரியும் கருப்பு மஞ்சள் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஜன வசியம், பணவசியத்திற்கு ஏற்றது கருப்பு மஞ்சள். இமயமலை மற்றும் இந்தோனேசியாவில் இது அதிகம் விளையக்கூடியது. பல நோய்களை குணப்படுத்தக்கூடியது கருப்பு மஞ்சள். மஞ்சள் மகாலட்சுமியின் அம்சம். மங்களகரமானது. கருப்பு மஞ்சள் எதிர்மறை சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது. கஷ்டங்கள், கவலைகள் துரத்தும் போது கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் உங்களின் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் பறந்தோடும்.

காளியின் அம்சம் கரு மஞ்சள்
கணவன் மனைவி சண்டை, உடல் நல பாதிப்பு, வீண் பண விரையம் ஏற்படுபவர்கள் கருப்பு மஞ்சளை உபயோகிக்கலாம். இது உங்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் அற்புதமான தாந்த்ரீக மஞ்சள். மருத்துவகுணம் கொண்ட மகத்துவமான மஞ்சள். காளியின் அம்சம் கொண்டது இந்த கருப்பு மஞ்சள். நர்மதா நதிக்கரையிலும் மற்றும் மத்திய பிரதேசத்திலும் வளரக்கூடிய அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. வம்பு வழக்கு, சண்டை சச்சரவுகள் பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும் கருப்பு மஞ்சளை உபயோகிக்க ஆரம்பித்தால் சண்டை சச்சரவுகள் தீரும்.

போர்க்களமான வீடுகள்
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி சதா சண்டை சச்சரவுடனே இருப்பார்கள். வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாகத்தான் இருக்கும். இதற்கு பயந்து கொண்டு வீட்டிற்கு கூட வராமல் பீச்சிலும், அலுவலகத்திலும் பொழுதை கழிப்பவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் கருப்பு மஞ்சளை பாக்கெட்டில் வைத்திருந்தால் சண்டை சச்சரவுகள் தீரும். பெண்கள் கருப்பு மஞ்சளை அரைத்து பூசத் தொடங்கினால் முகத்தில் பொலிவு கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

செய்வினை கோளாறுகள் நீங்கும்
கருப்பு மஞ்சள் காளி, பைரவர் உபாசனைக்கு பயன்படுத்தப்படுகிறது. செய்வினை கோளாறுகளை நீக்கும். எதிர்மறை சக்திகளை ஓட வைக்கும். வெற்றியைத் தேடித்தரும். ஜன வசியம், பணவசியம் செய்யக்கூடியது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த மஞ்சளை பணவசியத்திற்காக உபயோகிக்கின்றனர். நடு விரல் சனியின் அம்சம். அந்த விரலில் இருந்து ஒரு ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்து அந்த ரத்தத்தில் இந்த மஞ்சளை அரைத்து நெற்றியில் பொட்டாக வைத்துச் சென்றால் வராத பணமும் கைக்கு வரும் என்பது நம்பிக்கை.

வெற்றி மீது வெற்றி வரும்
கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் வெற்றியை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். கருமஞ்சள் சிறிதளவு எடுத்து சிவப்பு துணியில் கட்டி கழுத்தில் தாயத்து போல அணிய எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். ஜாதகத்தில் ராகு திசை, குரு திசை நடப்பவர்களுக்கும் கோச்சார ரீதியாக சனி, ராகு, குரு பலவீனமாக இருந்தால் தினசரி கருப்பு மஞ்சளை வைத்து வர பாதிப்புகள் குறையும். நன்மைகள் பெருகும்.

தோஷம் போக்கும் கருப்பு மஞ்சள்
ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள், ராகுவினால் ஏற்படும் தோஷத்தையும் போக்கக் கூடியது. பணம் வாங்க வேண்டும், லோன் சம்பந்தமாக பேச வேண்டும் என்று வெளியில் போனாலும் இதை பாக்கெட்டில் எடுத்து போனால் பணம் கிடைக்கும். வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடங்கள், ஹேண்ட்பேக், பணப்பெட்டி பீரோவில் கருப்பு மஞ்சளை வைக்கலாம். வெற்றிகள் தேடி வரும்.

கருப்பு மஞ்சள் திலகம்
கண் திருஷ்டி கோளாறுகள் இருந்தாலும் குணமடையும். தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டாலோ, உடல் நல பாதிப்புகள் வந்தாலோ இந்த கருப்பு மஞ்சள் நஷ்டத்தை போக்கும். புது வேலைக்கு இன்டர்வியூக்கு செல்பவர்கள் கருப்பு மஞ்சளை நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டு சென்றால் அது வெற்றிகரமாக முடியும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

கரு மஞ்சள் பிரேஸ்லெட்
கருப்பு மஞ்சளை ஒன்பது துண்டுகளாக சிறிது சிறிதாக வெட்டி அதை பிரேஸ்லெட் போல கோர்த்து கைகளில் அணிந்து கொள்ளலாம் நம் உடம்பிலும் மனதில் இருந்த எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும். பேய் பிசாசுகள் பாதிப்புகள் இருந்தாலும் அந்த பாதிப்புகள் மறைந்து போகும் பணவரவு அதிகரிக்கும் உடல் நல பாதிப்புகள் சரியாகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications