பணப்புழக்கம் வீட்டில் பெருக்க பரிகாரம்.. இதை கற்பூரவல்லி இலை மீது வெச்சிடுங்க.. மகிழ்ச்சி பெருகும்
சென்னை: வீட்டில் உள்ள தடைகள் நீங்கி பண வரவு அமைந்தாலே, ஓரளவு நிம்மதியான நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.. ஏனென்றால், புகழும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையைதான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். இதில் சிலருக்கு பணமிருக்கும், ஆனால் ஆரோக்கியம் இருக்காது.. ஆரோக்கியம் இருந்தாலும், புகழ் செல்வாக்கு அமையாது. இவை அனைத்துமே தேடி வர வேண்டுமானால் எளிய பரிகாரங்கள் நமக்கு கை கொடுக்கின்றன.

ஊறுகாய்கள் - பணப்பெட்டி
அதேபோல, கோயிலில் லட்சுமி மீது வைத்த தாமரையை எடுத்துவந்து, பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைத்தாலும் பணம் பெருகும். வீட்டில் உப்பு, பருப்பு போலவே ஊறுகாய்களையும் நிறைவாக வைத்திருக்க வேண்டும்.. வீட்டிற்கு வந்து செல்லும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் அவசியம் தரவேண்டும். இதனால், தெரியாமல் செய்த பாவங்களும் விலகிவிடும்.
அதேபோல, நாட்டு சர்க்கரையில் செய்த இனிப்பு பொருட்களை எறும்புகளுக்கு வைத்தால் பண தட்டுபாடுகள் நீங்கும். குறிப்பாக, பாலால் செய்யப்பட்ட இனிப்பு பொருட்களையும் எறும்புகளுக்கு வைக்கலாம்..
கற்பூரவல்லி இலைகள்
வெள்ளிக்கிழமைகளில் வெறும் தரையில் இந்த இனிப்புகளை வைக்காமல் கற்பூரவள்ளி இலைகள், அரச இலைகளில் வைக்க வேண்டும். வருமானத்தில் தடை, தொழிலில் நஷ்டம், போன்ற அனைத்துக்குமே இந்த பரிகாரம் உதவும்.. இதனால், இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதனால், பூர்வ ஜென்ம பாவங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
அதேபோல, யாருக்காவது பணம் கொடுக்க வேண்டுமென்றால், வீட்டின் வாசற்படியில் நின்று தரவும் கூடாது, அதை பெறவும் கூடாது.. குடும்பத்தில் செல்வம் நிலைக்க வேண்டுமானால், பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம்.
அதேபோல, வியாழக்கிழமை குபேர பகவானுக்கு விளக்கேற்றி வேண்டி கொள்ளலாம். குபேரரின் சிலையை துடைத்து, அதன் மீது பன்னீர் தடவி, சந்தனம் குங்குமம், பூக்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
1 ரூபாய் நாணயம்
பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் 1 ரூபாய் நாணயம் , 2 ஏலக்காய் சேர்த்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு மஞ்சள் நல்லெண்ணெய் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.. குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது பழம் வைத்து வைத்து வழிபட்டு வரலாம்.












Click it and Unblock the Notifications