Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலை இல்லையா? வேலுண்டு வினையில்லை..செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டால் கை மேல் பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: படித்து முடித்து விட்டு பலரும் இன்றைக்கு வேலைக்காக காத்திருக்கின்றனர். நல்ல வேலை கை நிறைய சம்பளம் கிடைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அரசு வேலை வேண்டும் என்று தேர்வு எழுதி விட்டு காத்திருப்பவர்கள் இருக்கின்றனர். வேலை இல்லா பட்டதாரிகள் அனைவரும் வேலுண்டு வினையில்லை என்று முருகப்பெருமானை சரணடைய வேண்டும். அதுவும் செவ்வாய்கிழமை முருகனை விரதம் இருந்து வழிபட்டால் நல்ல வேலையை தருவார் வேலவன்.

ஜாதகத்தில் கர்மஸ்தானம் எனப்படும் 10ஆம் வீடு தொழில் ஜீவனஸ்தானம் ஆகும். 6ஆம் வீடு என்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். 7ஆம் வீடு என்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2ஆம் வீடு என்பது தனஸ்தானம் நமக்கு வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். 11ஆம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11ஆம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். சனி இருந்தால் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும்.

 Spiritual Remedies for Good Job - Tuesday parikaram for Lord Murugam

நல்ல வேலை கிடைக்க வேண்டும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள். அரசு வேலையும் நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும். தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.

தமிழ்கடவுள் முருகன் செவ்வாய்க்கு அதிபதி. செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் திருமண தடை நீங்க செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். நல்ல வேலை கிடைக்கவும், அரசு வேலை குறிப்பாக காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கலாம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை..சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்று சொல்வார்கள். நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முருகனை வழிபடுவது நோயை தீர்க்கும். அதுபோல நல்ல வேலையும் வேலையில் புரமோசனும் கிடைக்க..கிடைத்த வேலை நிரந்தரமாக..வேலையில் இருக்கும் பிரச்சினைகள் நீங்க முருகனை வழிபடலாம்.

தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருப்பவர்கள் முருகப்பெருமானை மனதார வணங்கி கந்த சஷ்டி கவசம் படித்தால் கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் பறந்தோடும். படிப்படியாக கடன் பிரச்சினைகள் நீங்கும். பணம் வருவதற்கான வாய்ப்புகள் வீடு தேடி வரும். பொருளாதார வளமும் அதிகரிக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வணங்கலாம். அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் குறிப்பிட்ட முருகன் கோவிலுக்கு சென்று வணங்கினால் வெற்றிகள் கிடைக்கும் வேண்டியது நிறைவேறும். செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் திருப்பரங்குன்றம் முருகனை வழிபடலாம்.

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை முருகனை வழிபடலாம். கடக ராசிக்காரர்கள் திருத்தணி முருகனையும், சிம்ம ராசிக்காரர்கள் பழனி முருகனை படியேறி தரிசனம் செய்யலாம். குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு மீனம் ராசிக்காரர்கள் சுவாமி மலை முருகனையும் மகர ராசிக்காரர்கள் பழனி மலை முருகப்பெருமானையும் வணங்கலாம். சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் மருதமலை முருகப்பெருமானையும் வணங்க நினைத்த காரியம் கைகூடும் மனதிற்கு பிடித்த வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.

அதே போல நல்ல வேலை கிடைக்க அம்மன் கோவிலுக்கு சென்று மனம் உருகி அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். புதன்கிழமை, வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு உரிய நாள். மதுரை மீனாட்சி அம்மன் பச்சைப்புடவைக்காரி. அதுபோல ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று பச்சை புடவை சாற்றி வழிபட வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகுதிக்கேற்ற வேலை இல்லையே ஏதோ கிடைத்த வேலையை செய்கிறோமே என்று மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு அம்மனின் அருளினால் நல்ல வேலை கிடைக்கும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+