தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா? பூஜைக்கு உடைக்கும் தேங்காய் கெட்டு போயிருச்சா? அப்ப இதை பாருங்க
சென்னை: தேங்காய் பூஜையில் வைக்கும்போது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பூஜைக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அபசகுனமா??
தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்று வருகிறது.. எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், அதை மனதில் நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் தீபாவளி, பொங்கல், அமாவாசை, போன்ற விரத நாட்களிலும் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.. தேங்காய்கள் மங்களகரமான பொருளாக வழிபாடுகளில் இடம்பெறுவதற்கு காரணம், தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது..

3 கண்கள்: இப்படி 3 தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், தேங்காய்களை வைத்து பூஜிக்கும்போது, அவைகள் நல்லவிதமாக இருக்க வேண்டும் என்பதே விருப்பமாகும்.
ஆனால், சிலசமயங்களில் தேங்காயை உடைக்கும்போது அது அழுகிவிடக்கூடும். இதைப்பார்த்து பலரும் கலங்கிப்போய்விடுவார்கள். கெட்டுப்போன தேங்காய்கள் பூஜையில் இருப்பது, கெட்ட சகுனமாகவும் சிலர் அச்சம் கொள்வார்கள். தேங்காய் அழுகி இருந்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் கலங்குகிறார்கள்.
கோவிலில் சாமிக்கு படைக்கும் தேங்காய் மட்டும் அழுகக்கூடாது என்பார்களே தவிர, அது அபசகுனம் கிடையாது. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி என்கிறார்கள்.
கண் திருஷ்டி: அதாவது, உடைக்கப்பட்ட அழுகிய தேங்காய் மூலம், நமக்கு வரும் தீய சக்திகள், கண்திருஷ்டிகள் போன்றவை விலகிவிடுமாம். சரீர பீடை, கண்திருஷ்டி, ரோகம், துர் சொப்பனங்கள் போன்றவை அனைத்துமே உங்களைவிட்டு விலக போகிறது என்பதையே அழுகிய தேங்காய் மூலம் உணர்த்தும் அறிகுறியாகும்.
நீங்கள் எந்த காரியத்தை நினைத்து தேங்காய் உடைத்தீர்களோ அந்த காரியம் சித்தியடையும் என்றே இதன் அர்த்தமாகும்.. அடிக்கடி உடல் சரியில்லாமல் போவது, கெட்ட கனவுகள் வருவது இவையெல்லாம்கூட உடனே நீங்கிவிடும்.. எனவே, தெய்வத்திற்கு படைக்க இருந்த தேங்காய் அழுகி இருந்தால், நீங்கள் சந்தோஷப்படவேண்டுமே தவிர, கவலைப்படக்கூடாது என்கிறார்கள்.
சஞ்சலம்: ஒருவேளை, தெய்வத்துக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்து, உங்கள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தால், அன்றைய தினமே 5 அல்லது 7 நபருக்கு அன்னதானம் செய்துவிட்டு, மீண்டும் அதே காரியத்தை நினைத்து இன்னொரு தேங்காயை வாங்கி உடைத்து விட்டால் போதும்.. நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.
அதுவும் நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கும்.. அதேபோல, பூஜையில் உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால், வீட்டிற்குள் தனலாபமும், மகிழ்ச்சியான விஷயங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.
இதுதான் நேரம்: அதேபோல எந்த நேரத்தில் தேங்காய் உடைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.. காலை வேளையில் தேங்காய் உடைத்தால் நினைத்த காரியம் 10 நாட்களில் நடக்குமாம்..
மதிய வேளையில் தேங்காய் உடைத்தால் உங்களுக்கான பலன்கள் ஒரு மாதத்திற்குள் நடக்கும்.. அதேபோல, இரவு நேரங்களில் தேங்காய் உடைத்தால் 6 மாதத்திற்குள் அந்த பலன்கள் உங்களை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications