ருத்திராட்சத்தை பெண்கள் அணியலாமா? ருத்ராட்சையை சுத்தம் செய்வது எப்படி? சிறப்பு தரும் ருத்ராட்சை மாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ருத்ராட்சம் அணிவதன் பயன்கள் என்னென்ன? ருத்ராட்சம் அணிந்துகொண்டு அசைவம் சாப்பிடலாமா? பெண்கள் ருத்ராட்சையை அணியலாமா?

ஆண்டிபயாடிக் நிறைந்த ருத்ராட்சைகள், நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடியது.. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யக்கூடியவை. மன பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்று நோய்கள் என பல்வேறு நோய்களை போக்கக்கூடிய தன்மை இந்த ருத்ராட்சைகளுக்கு உண்டு.

Spirituality

நச்சுத்தன்மை: உடலில் ஏதாவது நச்சுத்தன்மை வாய்ந்த புண்கள், காயங்கள் இருந்தாலும், ருத்ராட்சைகள் அவைகளை ஆற்றிவிடும். ஏனென்றால், வெப்பத்தை கிரகித்துக்கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை இந்த ருத்ராட்சைகளுக்கு இருக்கிறது. அதனால்தான், உடல் குளிர்ச்சி பெறுவதற்காக இதை பலரும் அணிவார்கள்..

ஒரு மதம் மட்டுமேயல்லாமல், அனைத்து மதத்தினருமே அணியலாம்.. வயது வித்தியாசமின்றி அணியலாம். ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

ஆன்மீக ரீதியாக பார்த்தோமேயானால், மிகவும் புனிதம் நிறைந்த, மங்களகரமான பொருளாக ருத்ராட்சை கருதப்பட்டு வருகிறது. காரணம், சிவபெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால், சிவபக்தர்கள் இந்த ருத்ராட்சையை அணிந்து கொள்வார்கள்.. இதனால் மனம் அமைதி பெறுவதுடன், முன்னேற்றம், செல்வம், மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

சிவபக்தர்கள்: இதில், 21 வகைகள் ருத்ராட்சங்கள் உள்ளதாம். இந்த ருத்ராட்சைகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழும். இவைகளுக்கெல்லாம் முன்னோர்களும், பெரியோர்களும் சரியான விளக்கத்தை சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில், பெண்கள் இந்த ருட்ராட்சையை அணியலாமா? என்ற சந்தேகம் உள்ளது. பெண்கள் பொதுவாக அவர்களின் மாதவிலக்கு முழுவதும் நின்ற பிறகு ருத்ராட்சையை அணிவது நல்லதாம். அப்படி அணியும் பெண்கள் ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம் ஆகியவை சேர்த்து கோர்த்து அணிந்து கொண்டால் இன்னும் சிறப்பு என்கிறார்கள். ஆனால், 3,6,9 முக ருத்ராட்சங்கள் மட்டும் அணியலாம்.

ருத்ராட்சை: ருத்ராட்சையை இரவில் தூங்கும்போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது.. அதேபோல, அசைவம் சாப்பிடுபவர்களும் அன்றைய தினம் ருத்ராட்சையை கழற்றி வைத்து விடுவது நல்லது. மறுநாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி மீண்டும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சையில் உள்ள கோடுகளை விபூதி சந்தனம் வைத்து மறைக்கக் கூடாது..

திதி, தாம்பத்யம் போன்ற விஷயங்கள் இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வு என்பதால், இதுபோன்ற நேரங்களில் ருத்ராட்சை அணியலாம்.. சிவப்பு, மஞ்சள், வெள்ளை நூலில் அணியலாம்.. அல்லது வெள்ளி, தங்கம், தாமிரத்தில்கூட அணியலாம். ஆனால், கருப்பு நூலில் மட்டும் இதை கோர்த்து அணிய கூடாதாம்.

சுத்தம் செய்ய வேண்டும்: ருத்ராட்சையை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.. ஆனால் சோப்பு பயன்படுத்த கூடாது. ஆலிவ் எண்ணெய, கடுகு எண்ணெய் அல்லது பசும் பாலில் 24 மணி நேரம் ஊற வைத்து, புதிய பிரஷ்ஷில் தேய்த்து எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவி, பிறகு துடைக்க வேண்டும்.

அல்லது ஒருவார காலத்துக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்ராட்சையை ஊறவைக்கவேண்டும்... பிறகு தூய்மையான தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஈரம் காய்ந்ததும், திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும். இதற்கு பிறகு, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும்,. மறுபடியும் மீண்டும் சுத்தமான தண்ணீரில் நீரால் தூய்மைப்படுத்தவேண்டும்.

ஆசீர்வாதம்: எப்போதுமே ருத்ராட்ச மாலையை சிவன் கோவிலில் வைத்து அணிவது மிகவும் சிறப்பு.. அதேபோல, பெற்றோரிடம் அல்லது தான் அதிகம் மதிப்பு வைத்தவர்களிடம் தந்து, அவர்களின் கையால் வாங்கி அணிந்து கொள்வது நல்லது.. பிறகு அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+