சர்க்கரை டப்பாவில் இதை மட்டும் போடுங்க.. அதென்ன மொச்சை பயிறு பரிகாரம்? பணக்கஷ்டம் தீர உதவும் டிப்ஸ்
சென்னை: எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்குவதில்லையா? கடன் பிரச்சனை ஓயவில்லையா? அதிர்ஷ்டமும், நன்மையும் கிடைக்க வேண்டுமானால், சில எளிய பரிகாரங்கள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், சில பரிகாரங்களை பார்ப்போம்.
வீட்டின் பூஜையறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ 2 யானை சிலைகளை வைக்கலாம்.. அல்லது 2 குதிரை சிலைகளையும் வைக்கலாம்.. காரணம், பணவரவை பெருக்கக்கூடிய சக்தி, இந்த சிலைகளுக்கு உள்ளன..

அதேபோல, வீட்டின் வாசலில் குதிரைப்படம் அல்லது காளைமாடு படம் வாங்கி வைக்கலாம். இதை நீங்கள் பார்க்கும்படியாக வைக்க வேண்டும். இந்த இரண்டு படங்களுக்கும் வீட்டிலுள்ள வறுமையை குறைக்கும் தன்மை உள்ளதாம். இந்த இரண்டையும் நீங்கள் தினமும் பார்த்து வருவதால், பணப்பிரச்சனை மெல்ல நீங்கும்.
பச்சை கற்பூரம்: அதேபோல, ஒரு வெள்ளை துணியை விரித்து, 1 கைப்பிடி மிளகு, 1 கைப்பிடி பச்சரிசி, பச்சை கற்பூரம் போன்றவை வைத்து முடிச்சு போல கட்டி பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். தினமும் விளக்கேற்றி வழிபடும்போது, சிக்கல்கள், பண பிரச்சனைகளை சொல்லி பிரார்த்திக்க வேண்டும். கடவுளை வணங்கியதுமே, இந்த முடிச்சியினை வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது பீரோவிலோ வைத்துவிட வேண்டும்.
இதற்கு பிறகு கடனை அடைப்பதற்கான முயற்சியில் நீங்கள் இறங்கினால், உரிய பலன் விரைவில் கிடைக்குமாம். 1 மாதம் கழித்து, இந்த முடிச்சினை ஓடும் நீரில் விட்டுவிடலாம். இப்படி 3 மாதங்களுக்கு செய்து வரும்போது, கடன் பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் பணவரவு பெருகும் என்பது நம்பிக்கையகும்.
வாசலில் பூக்கள்: அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரஹோரையில் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக, வாசலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பூக்களை போட்டு வைக்கலாம்.
சமையலறையில் உள்ள சர்க்கரை டப்பாவில், சிறிதான வெள்ளி ஸ்பூன் ஒன்றை வாங்கி போட்டு வைக்கலாம். இதனால் சுக்கிர பகவானின் ஆசி கிடைக்கும். அல்லது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் சிறிய வெள்ளி ஸ்பூனையாவது சர்க்கரை டப்பாவில் போட்டு வைக்கலாம். முடிந்தால் வெள்ளி டம்ளரிலும் தண்ணீர் குடிக்கலாம். டம்ளர், வெள்ளி டம்ளராக பயன்படுத்தி வரும்போது, தரித்திரம் மெல்ல மெல்ல விலகுமாம்.
மொச்சை: ஒரு கைப்பிடி மொச்சையை முடிச்சாக கட்டி தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். காலையில் கண் விழித்ததுமே அதை ஒரு அலமாரியில் வைத்து வைத்துவிட வேண்டும். இப்படி 48 நாள் தலையணைக்கு அடியில் மொச்சை வைத்து தூங்க வேண்டும். 48 நாள் கழித்து இந்த முடிச்சை ஓடும் நீரில் போட்டுவிடலாம். அல்லது பசுமாட்டுக்கு தரலாம்.. இப்படி செய்வதாலும் சுக்கிரனின் அனுகிரகம் தாராளமாக கிடைக்கும் என்பார்கள்.
அதேபோல, பிரியாணி இலைகளையும் பரிகாரத்துக்கு பயன்படுத்தலாம்.. இரவில் தூங்குவதற்கு முன்பு, ஒரேயொரு பிரியாணி இலையை தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு படுத்தால், உங்களை துர்சக்திகள் நெருங்காது, கெட்ட கனவுகளும் வராது. ஒரு பிரியாணி இலையில், உங்களுடைய கோரிக்கையை எழுதி, வீட்டிலுள்ள பூஜை அறையில் வைத்துவிட்டாலும், உங்கள் பிரார்த்தனை ஈடேறும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications