Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றம்.. விண்ணை எட்டிய அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்ட போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். மலையே சிவமாக திகழ்வதால் இங்கு பக்தர்கள் கிரிவலம் வந்து வணங்குகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் வந்து பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.

Tirukarthigai Deepam Festival Tiruvannamalai begins with Flag hoisting at Annamalaiyar Temple

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா எல்லை தேவதைகளுக்கு பூஜையுடன் செவ்வாய்கிழமை இரவு தொடங்கியது.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியவுடன் அண்ணாமலையார் சந்நதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க துலா லக்னத்தில் காலை 05:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 23 ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருவிழாவின் 10ஆம் நாள் இரவு நவம்பர் 26 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருக்கார்த்திகை தீப திருவிழாவை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு இரயில்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணிக்க உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

வி.ஐ.பி பாஸ் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், போலி அடையாள அட்டையை தடுக்கும் வகையில் கோயில் நுழைவாயிலில் காவல்துறை மூலம் பரிசோதனை செய்து பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் கோயிலுக்குள் வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும், உள்ளூர் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சேகர்பாபு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+