திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில் மாசி மகம் விழா..சுந்தரர் செய்த சத்தியம்..சிவனின் திருவிளையாடல்
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி தேரோட்டம் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை: பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டமானது வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. மாசி மகத்தை முன்னிட்டு மார்ச் 6ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சுந்தர சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 63 நாயன்மார்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும்.

உலக பிரசித்தி பெற்ற 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி , வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா பத்து நாள் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறுகிறது.
இந்த விழா நடைபெறுவதற்கு ஒரு புராண நிகழ்வு உள்ளது. முன்ஜென்மத்தில், சுந்தரர் ஈசனுக்கு அருகில் இருந்து தொண்டு செய்து வந்தார்.அவர் தேவலோகத்தில் இருந்த காலத்தில்,அங்கிருந்த இரண்டு பெண்கள்மீது காதல் கொண்டார்.அந்த இரண்டு பெண்களும் அம்பாளின் பணிப் பெண்கள். அவர்கள் இருவரும் சுந்தரரை திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இதன் காரணமாக,அவர்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஒரு பெண், பரவை என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலி என்ற பெயரில் சென்னை திருவொற்றியூர் அருகிலுள்ள ஞாயிறு என்ற கிராமத்திலும் அவதரித்தனர்.

ஒரு சமயம், திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோவிலுக்கு வந்த பரவையைப் பார்த்தார் காதல் கொண்டார்.
சிவன் அருளால் அவர்களுக்கு திருமணமும் நடந்தது. சில காலம்,அங்கு தங்கியிருந்த அவர், சிவத்தலங்களைத் தரிசிப்பதற்காக மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கிளம்பினார். திருவொற்றியூர் வந்த போது, அங்கே கன்னிமாடம் அமைத்து தங்கியிருந்த சங்கிலியை கண்டார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். சங்கிலியாரும் சுந்தரர் மேல் காதல் கொண்டார்.ஆனால் அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.
சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர்,தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் ஈசன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகையால் என்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். ஈசன் இதை சுந்தரரிடம் கூறினார்.

அதற்கு சுந்தரர் ஈசனிடம், ஊர் ஊராகச் சென்று ஈசனைப் பாடும் நான்,ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம். அந்தப் பெண்ணைப் பிரியாமல் என்னால் இருக்கமுடியாது. அதே சமயம் அவளை நான் மணக்கவும் வேண்டும்.
ஈசன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது.ஆகவே சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நதியில் நீங்கள் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் என்றார் ஈசனிடம் சுந்தரர்.
இதனை ஈசன் சங்கிலி நாச்சியாரிடம் தெரிவித்தார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த ஈசனை மூன்று முறை வலம் வந்து,என்றும் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். அந்த திருக்கல்யாண உற்சவம் மாசி மகம் நாளில் நடந்தேறியது. இந்த ஆண்டு வரும் மார்ச் 6ஆம் தேதி இந்த விழா நடைபெற உள்ளது.
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 108 சங்க நாதங்கள் முழங்க பரிவர்த்தனைகளுடன் கலச பூஜைகளுடன் வாத்தியங்கள் ஒலிக்க வெகு விமரிசையாக கொடியேற்றப்பட்டது. மாசி உற்சவம் மார்ச் 6 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என தினந்தோரும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 47 அடி உயரமுள்ள மரத் தேரில் சந்திரசேகரனுடன் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்கள். இதனைத் தொடர்ந்து மார்ச் 6ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சுந்தர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
சங்கிலி நாச்சியாருக்கு தாலி சாத்தப்பட்ட உடன் ஆயிரக்கணக்கான பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த புது தாலியை கழுத்தில் கட்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதையடுத்து மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் குழந்தை ஈஸ்வரர் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், இரவில் தியாகராஜசுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெறும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications