வைகுண்ட ஏகாதசி..பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் ஸ்ரீரங்கம்..நம்பெருமாளின் அழகிய தரிசனம்
திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழா திருச்சி ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பகல்பத்து விழாவின் முதல்நாளான இன்று நம்பெருமாள் கல் இழைத்த நேர் கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம் அணிந்திருந்தார், கபாய், அடுக்கு பதக்கங்கள்,காசுமாலை, நெல்லிக்காய் மாலை திருவாபரணங்கள் சாற்றி அர்ஜூனாமண்டபடத்தில் எழுந்தருளினார். அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று மாலை தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிந்தா கோபாலா மந்திரங்கள் முழங்க புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார்.
முதல்நாளான இன்றைய தினம் நம்பெருமாள் கல் இழைத்த நேர் கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம் அணிந்திருந்தார், கபாய், அடுக்கு பதக்கங்கள்,காசுமாலை, நெல்லிக்காய் மாலை திருவாபரணங்கள் சாற்றி எழுந்தருளினார்.
காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். இன்று காலை 7.15 மணி முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யவும், பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி சேவையில் காட்சியளித்து வருகிறார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் நாளான இன்று ஏராளாமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். பகல் பத்தின் முதல் நாளான இன்று முதல், ஜனவரி, 11ம் தேதி வரை, நல்முத்துகளால் செய்யப்பட்ட முத்தங்கியை அணிந்து மூலவர் ரங்கநாதர் சேவை சாதிப்பார். முத்தங்கி சேவையில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வருகை தருவார்கள் என்பதால், விழா துவங்கி முடியும் வரை, மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப்படுகிறது. இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பகல்பத்து உற்சவத்தின், 10வது நாள் ஜனவரி 1ம் தேதி நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஜனவரி, 2ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை, 3.30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை, 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.
சொர்க்கவாசல், 2ம் தேதி முதல், 7ம் தேதி வரை, பகல், 1 மணி முதல், இரவு, 8 மணி வரை திறந்திருக்கும். 8ஆம் தேதி மாலை, 4 மணி முதல், இரவு, 8.30 மணி வரை திறந்திருக்கும். 9ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான, 2ஆம் தேதி முதல், ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான, 8ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான, 9ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான, 11ம் தேதி தீர்த்தவாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
தொடர்ந்து, இருபது நாட்கள் நடைபெறும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, கோயில் வளாகத்தில் சிறப்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடன், கூடுதலாக, 92 கேமராக்கள் இணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலை கண்காணித்து, நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications